அக நக பாடல் உருவான கதையை பகிர்ந்த ARரஹ்மான்... பொன்னியின் செல்வன் 2 பட அசத்தலான பிரத்யேக பேட்டி இதோ!

அக நக பாடல் உருவான கதையை பகிர்ந்த ARரஹ்மான்,ar rahman shared about aga naga song making in ponniyin selvan 2 movie | Galatta

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஒரு வெற்றி கூட்டணி என்றால் அது இயக்குனர் மணிரத்னம் - இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி தான். கடந்த 1992 ஆம் ஆண்டு ரோஜா திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை அறிமுகப்படுத்திய இயக்குனர் மணிரத்னம் தொடர்ந்து திருடா திருடா, பாம்பே, இருவர், உயிரே, அலைப்பாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, குரு, ராவணன், கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் என தொடர்ச்சியாக இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடன் பணியாற்றி வருகிறார். இந்த வரிசையில் இந்த வெற்றி கூட்டணியின் அடுத்த படைப்பாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரசிகர்களை மயக்கி உள்ளது. 

முன்னதாக கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் 2 வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனிடையே நமது கலாட்டா பிளஸ் சேனலில் திரு.பரத்வாஜ் ரங்கன் அவர்களுடனான சிறப்பு நேர்காணலில் இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் கலந்து கொண்டு பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் பொன்னின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றுள்ள அகநக பாடல் உருவான கதையை நம்மோடு பகிர்ந்தார். அப்படி பேசுகையில்

“நாங்கள் நிறைய விஷயங்கள் செய்திருக்கிறோம். ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்தால் எங்களுக்கு போர் அடிக்கும். அவரிடம் (இயக்குனர் மணிரத்னம்) கொடுப்பதற்கு எனக்கே போர் அடிக்கும். அவரிடம் எந்த பாடலின் டியூன் சுவாரசியமாக இருக்கும் என்பதை சரியாக கணிக்கும் அற்புதமான திறன் இருக்கிறது.” என தெரிவித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் பொன்னியின் செல்வன் 2 படத்துல இடம் பெற்றுள்ள அக நக பாடல் கூட்டிட்டு பேசியபோது, “நாங்கள் நிறைய ட்யூன்கள் போட்டுக் கொண்டிருந்தோம். கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாகக் கொண்டு நான் நிறைய ட்யூன்கள் கொடுத்தேன். பின்னர் அவர் சொன்னார், “AR எனக்கு நெஞ்சுக்குள்ள மற்றும் மூங்கில் தோட்டம் மாதிரி ஒரு காதல் பாடல் கொடு” என்றார். நானும் சரி என்று சொன்னேன். அந்த மாதிரி பாடல் இந்த படத்தில் இல்லாமல் போனது. எனவே அவருக்கு அது தேவைப்பட்டது. எனவே நான் பியானோவில் அமர்ந்தேன் என்னிடம் ஒரு 8-9 ஐடியாக்கள் இருந்தன. பின்னர் ஹரிணி வந்த பிறகு இந்தப் பாடலின் ஒரு வாய்ஸ் வெர்ஷனை எடுத்து வைத்தோம். அப்படித்தான் அக நக பாடல் வந்தது. உண்மையில் என்னிடம் இன்னொரு ட்யூன் இருக்கிறது. ரிலீசுக்கு முன்பே அவர் அதை எடுத்துவிட்டார். பின்னர் இது மிகவும் பிரபலமாகி வைரலும் ஆனது. என இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரசியங்களை பகிர்ந்து கொண்டால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் - இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அந்த சிறப்பு பேட்டி இதோ…
 

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!
சினிமா

'ARரஹ்மானுடன் 30 வருட பயணம் - பொன்னியின் செல்வன் படம்... எது பெரிய சாதனை?'- வைரலாகும் மணிரத்னத்தில் அட்டகாசமான பதில் இதோ!

விஷால் - ஹரி - கார்த்திக் சுப்புராஜ் அதிரடி கூட்டணியில் புதிய படம்... விஷால் 34 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
சினிமா

விஷால் - ஹரி - கார்த்திக் சுப்புராஜ் அதிரடி கூட்டணியில் புதிய படம்... விஷால் 34 பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

எல்லோரும் பாகம் 3 பற்றி கேட்கிறார்கள்!- மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

எல்லோரும் பாகம் 3 பற்றி கேட்கிறார்கள்!- மணிரத்னம் - ARரஹ்மான் இணைந்த பொன்னியின் செல்வன் 2 ஸ்பெஷல் பேட்டி இதோ!