தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர்ப்பட்டாளத்தை கொண்டுள்ளவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.கடைசியாக 2018-ல் வெளியான Agnyaathavaasi படத்தில் நடித்திருந்தார்.இதனை அடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து ஜன சேனா பார்ட்டியில் முழுவதுமாக ஈடுபட்டார்.2019 லோக்சபா தேர்தலில் தனது ஜன சேனா கட்சி சார்பில் இரண்டு இடங்களில் போட்டியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்த பவன் கல்யாண் ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும்  வக்கீல் சாப் படத்தில் நடிக்கத்தொடங்கினார்.இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து Hari Hara Veera Mallu என்ற சரித்திர படத்திலும்,தனது கப்பார் சிங் இயக்குனர் ஹரிஷுடன் PSPK 28 படத்திலும் நடித்து வருகிறார் பவன் கல்யாண்.அடுத்ததாக ராணாவுடன் இணைந்து மலையாளத்தில் சூப்பர்ஹிட் ஆன அய்யப்பனுக்கு கோஷியும் ரீமேக் படத்திலும் நடித்து வருகிறார்.

ஹரிஹர வீரமல்லு படத்தினை க்ரிஷ் இயக்குகிறார்.சரித்திர படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கிறார்.இன்று பவன் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர்.இந்த படம் ஏப்ரல் 29ஆம் தேதி 2022-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.