இசைஞானி இளையராஜாவின் அண்ணன் மகனான ஜோ காலமானார். இவர் இசைஞானி இளையராஜாவின் அண்ணனான பாவலர் வரதராஜன் என்பவரின் இளைய மகன் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். ஆர்.வி.உதயகுமாரிடன் இணை இயக்குனராக பணியாற்றிய இவர், பல்வேறு படங்களில் பணிபுரிந்துள்ளார். 

கிழக்கு வாசல், சிங்காரவேலன், சின்ன கவுண்டர், உட்பட பல படங்களுக்கு இணை இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதனையடுத்து இவர் கற்க கசடற என்ற படத்திற்கு வசன கரத்தாவாக இருந்ததோடு நாலு பேரும் ரொம்ப நல்லவங்க என்ற படத்தை இயக்கியதும், அதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்ததும் குறிப்பிடத்தக்கது. 2013-ம் ஆண்டு இந்த படம் பூஜையுடன் துவங்கியது. 

கடந்த சில நாட்களாக ஜோ உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாவலர் மைந்தன், நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் இசை பிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜோவின் இறப்பை தாங்க முடியாமல் அவரது சகோதரர் பாவலர் சிவா முகநூலில் உருக்கமான பதிவு ஒன்றை செய்துள்ளார். யாரிடம் போய் உரைப்பேன் ? அப்பா, அம்மா, அண்ணன்களை பார்க்க போயிட்டியா என்று சோகத்துடன் பதிவு செய்துள்ளார். 

உலகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 9 லட்சம் நபர்களுக்கு மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் உலக அளவில் 13 மில்லியன் மக்களை பாதித்துள்ளது. பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் செய்தி தொலைக்காட்சியில் கொரோனா எண்ணிக்கை பற்றிய செய்திகள் தான் அதிகம் ஒளிபரப்பாகிறது. 

இந்த துயரம் ஒருபுறமிருக்க, தொடர்ச்சியாக பல திரைத்துறை சார்ந்த கலைஞர்களின் இறப்பு செய்தி நம் கண்களில் படுகிறது. இதனால் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் சினிமா கலைஞர்கள் மற்றும் சினிமா சார்ந்த தொழிலாளர்கள். சுஷாந்த் சிங், சிரஞ்ஜீவி சர்ஜா, AL ராகவன், கன்னட நடிகர் சுஷீல் கவுடா போன்றோர் மறைந்த செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.