தமிழ் திரையுலகில் ரசிகர்களின் அபிமானம் பெற்று வளர்ந்து வரும் ஹீரோயின்களில் ஒருவர் அபர்ணா பாலமுரளி. இவர் இந்தியாவின் பாரம்பரியமனா இசை மற்றும் பரத நாட்டியம்,  மோகினி ஆட்டம், குச்சிப்புடி உட்பட நடன பலவகை யுத்திகளை தன் கைவசம் கொண்டுள்ளார். மலையாளத்தில் வெளிவந்த யாத்திரை தொடரும் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். 2016-ம் ஆண்டு  மலையாளத்தில் வெளிவந்த மகேசென்ட் பரதிகாரம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார். 

ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, ஒரு முத்திசை காடா, மழையாய் உட்பட மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2017-ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ்  இயக்கத்தில் வெளியான 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார். அதன் பின் ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளியான சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார். தற்போது சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். 

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூரரைப் போற்று. சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. 

இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்போது ஒரு நோக்கு கனுவன் பாடலின் கவர் வெர்ஷனை பாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார் அபர்ணா. சண்டே ஹாலிடே என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் பற்றியும், படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தை தெறிக்க விடுகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Marking three years of Sunday Holiday. One of my most favourite movies. When I first said yes to Jisettan, I understood I had made the right choice and that is a quite difficult task when it comes to the selection of movies. Thank you Jisetta @director.jisjoy for calling me for one of the finest Malayalam movies. Thank you Deepaketta @deepakdevofficial for giving me a hit, 'Mazhapaadum'. Thankyou Asikka @asifali for being the bestest co-star. For making all your co-stars so comfortable to act. To all the seniors, Siddiquekka, Lalithamma, Sudheer chettan and all others❤️ Sunday Holiday is a huge family. It'll always be special ✨❤️ Here's my attempt to sing 'Oru Nokku Kanuvan' from the movie, sung by one of the best, Karthik sir. A big thanks to my dearest achan for helping me do this. A young very talented pianist, Amit Sajan @amith.sajan and Sound engineer Saji R, Sajiettan @saji4862 and Chethana Studio ❤️ #threeyears #SundayHoliday

A post shared by Aparna Balamurali✨ (@aparna.balamurali) on