“பொண்டாட்டிய கொல்வது எப்படி?” என்று கணவர் கூகுளில் தேடிப் பார்த்து மனைவியைக் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

“காதல் எதையும் செய்யத் தூண்டும் என்றால், கள்ளக் காதல் கொலையும் செய்யத் தூண்டும்” என்பது மட்டும் கடந்த கால கள்ளக் காதல் கதைகள் மெய்ப்பித்து வருகின்றன. ஒரு பெண்ணின் மீதான திருமணத்தை மீறிய உறவைக் கள்ளக் காதல் என்று சொல்லிவிட்டு எளிதில் கடந்து விடலாம். ஆனால், ஓரினச்சேர்க்கை காதலனை என்ன உறவு முறை சொல்லி அழைப்பது?

பிரிட்டனில் மிடில் பிராவில் வசித்து வந்த மித்தேஷ் - ஜெஸ்ஸிகா பட்டேல் தம்பதியினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட நிலையில், மகிழ்ச்சியாகவே தங்களது திருமண வாழ்க்கையை அவர்கள் தொடங்கி உள்ளனர்.

இதனிடையே, மனைவி ஜெஸ்ஸிகா பட்டேலுக்கு தற்போது 34 வயது நடந்து வரும் நிலையில், கணவர் மித்தேஷ் தன் பாலின ஓரினச்சேர்க்கை காதலருடன், இயற்கைக்கு மீறிய சல்லாப வாழ்க்கைக்கு அடிமையாகி இருந்து உள்ளார்.

ஒரு கட்டத்தில், தன் பாலின ஓரினச்சேர்க்கை மனைவி தடையாக இருப்பதாகக் கருதிய மித்தேஷ், மனைவியை கொலை செய்யத் திட்ட மிட்டார். அதன் படி, கடந்த காலங்களில் குடும்ப வாழ்க்கை கசந்துபோன கணவன்கள் எப்படி எல்லாம் தன் மனைவிகளைக் கொலை செய்தார்கள் என்று, நிறைய வீடியோக்களை அவர் இணையத்தில் தேடிப் பார்த்தும், படித்தும் வந்திருக்கிறார்.

மேலும், “மனைவியை விஷம் வைத்து அல்லது தூக்க மாத்திரி கொடுத்துக் கொல்வது என்பது தொடங்கி, ஆள் வைத்துக் கொல்வது வரை பழைய கால கொலைகள் குறித்தும்” அவர் ஆராய்ந்து உள்ளார்.

குறிப்பாக, “பொண்டாட்டிய கொல்வது எப்படி?” என்றும், கணவன் மித்தேஷ் கூகுளில் தேடி பார்த்துள்ளார். அத்துடன், “கூலிப்படை எங்கு கெடைப்பார்கள்?” என்றும் அவர் கூகுளில் தேடி இருக்கிறார். அதன் படி, கூகுளில் மித்தேஷ்க்கு என்ன காட்டியதோ தெரியவில்லை. ஆனால், மித்தேஷ் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார். 

அதன் படி, அஜித் நடித்த “ஆசை“ படத்தில் வரும் கொலைக் காட்சியைப் போலவே, “பிளாஸ்டிக் கவர் ஒன்றால் கழுத்தை நெரித்து” தன் மனைவி ஜெஸ்ஸிகாவை, கணவன் மித்தேஷ் கொடூரமாகக் கொலை செய்து உள்ளார். ஆனால், மனைவியை கொன்று விட்டு, “நான் வீட்டில் இல்லாத நேரத்தில் என் மனைவியை மர்ம நபர்கள் யாரோ கொலை செய்து விட்டதாகக் கூறி நாடகம் ஆடி உள்ளார்.

இது குறித்து விரைந்து வந்த அந்நாட்டு போலீசார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஜெஸ்ஸிகாவை அவரது கணவர் மித்தேஷ் தான் கொன்று இருக்க வேண்டும் என்று போலீசார் ஒரு முடிவுக்கு வந்தனர். ஆனால், போலீசாருக்கு எந்த ஒரு ஆதாரமும் கிடைக்க வில்லை.

இது தொடர்பாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மித்தேஷின் ஐ போனை வாங்கி ஆய்வு செய்தனர். அதில், “பொண்டாட்டிய கொல்வது எப்படி?” என்றும், “கூலிப்படை எங்கே கிடைப்பார்கள்?” என்றும், கணவன் மித்தேஷ் கூகுளில் தேடி பார்த்துள்ளது தெரிய வந்தது.

இதனை அடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், மனைவியை அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். மேலும், “மனைவி ஜெசிகாவை கொன்று விட்டு அவருடைய இன்சூரன்ஸ் பணத்துடன், அவுஸ்திரேலியாவுக்கு சென்று தனது ஓரினச்சேர்க்கை காதலருடன் இன்ப மயமான வாழ்க்கையை வாழத் 

திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மனைவியை, கணவர் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதால், அந்நாட்டு சட்டப்படி சுமார் 30 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, “பொண்டாட்டிய கொல்வது எப்படி?” என்று கணவன் கூகுளில் தேடிய நிலையில், “ஆசை” அஜித் பட பாணியில் மனைவியைக் கொலை செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.