கிரிக்கெட் கதைகளத்தில் இயக்குனர் பா ரஞ்சித்.. உற்சாகத்தில் ரசிகர்கள் – வைரலாகும் டைட்டில் வீடியோ இதோ..

பா ரஞ்சித் தயாரிப்பில் புது பட டைட்டிலை வெளியிட்ட படக்குழு வைரல் பதிவு இதோ - Director pa ranjith next film as producer titled blue star | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பா ரஞ்சித். சமூக கருத்துகளை நேர்த்தியான படைப்பின் மூலம் ரசிகர்களுக்கு கொடுத்து பிரபலமடைந்த பா ரஞ்சித் தற்போது சியான் விக்ரம் கூட்டணியில் பிரம்மாண்ட படைப்பான ‘தங்கலான்’ படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தை தொடர்ந்து பா ரஞ்சித்தின் மெகா ஹிட் திரைப்படமான ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படத்தை இயக்கவுள்ளார். பா ரஞ்சித் இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் கவனம் பெற்று வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான பரியெரும் பெருமாள் ரைட்டர், பொம்மை நாயகி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அவர் ஊர்வசி நடிப்பில் உருவாகி வரும் ஜெ.பேபி மற்றும் கடைசி குண்டு படத்தின் இயக்குனர் அதியன் ஆதிரை அவர்களின் அடுத்த படமான ‘தண்டகாரண்யம்’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.

 

#BLUESTAR 💙🌟 First Look Poster#BlueStar Anthem ▶️ https://t.co/8RkMFOU2w3 #BlueStarFirstLook 🏏@officialneelam @Lemonleafcr @chejai007 @AshokSelvan @imKBRshanthnu @prithviactor @iKeerthiPandian @GANESHM28483208 @Soundarya1987 #GovindVasantha @Lovekeegam @that_Cameraman pic.twitter.com/7PbempbpdV

— pa.ranjith (@beemji) May 20, 2023

இதனிடையே இயக்குனர் பா ரஞ்சித் கிரிக்கெட் கதைகளத்தில் தயாரித்து வரும் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. இயக்குனர் எஸ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ‘ப்ளூ ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயாகர்களாக அசோக் செல்வன் , சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் முக்கியமான கதாபாத்திரங்களில் பாண்டிராஜ் மகனும் நடிகருமான பிரித்வி ராஜன், கீர்த்தி பாண்டியன், கேன் கருணாஸ், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் படத்திற்கு தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்ய செல்வா ஆர் கே படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு 96 படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

சென்னை அருகாமை பகுதியான  அரக்கோணம் நிலப்பரப்பில் இரு தரப்பு கிரிகெட் குழுவினருக்கிடையே நடைபெறும் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது. ப்ளூ ஸ்டார் படத்தின் டைட்டில் அறிவிப்புடன் அப்படத்தின் ப்ளூ ஸ்டார் ஆன்தம் கோவிந்த் வசந்தா இசையில் வெளியாகியுள்ளது. உமாதேவியுடன் இணைந்து அறிவு எழுதி பாடியுள்ளார்.மேலும் இப்பாடலில் படத்தில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளையும் இணைத்து கொடுத்துள்ளனர். சென்னை 28, மெட்ராஸ், அட்டகத்தி சாயலில் அட்டகாசமான திரைப்படமாக உருவாகியுள்ளது என ரசிகர்கள் இப்படத்தினை வரவேற்று வருகின்றனர்.

 

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.
சினிமா

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ரசிகை.. அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா.! – உருக்கமான இரங்கல் செய்தி இதோ.

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..
சினிமா

நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..

ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு ஆதரவு தந்த 'வாடிவாசல்' நாயகன் சூர்யா.. - இணையத்தில் வைரலாகும் பதிவு.. விவரம் இதோ..
சினிமா

ஜல்லிக்கட்டு தீர்ப்பிற்கு ஆதரவு தந்த 'வாடிவாசல்' நாயகன் சூர்யா.. - இணையத்தில் வைரலாகும் பதிவு.. விவரம் இதோ..