நண்பனை திருமணம் செய்யவிருக்கும் கனா காணும் காலங்கள் பிரபலம் தீபிகா.. - குவியும் வாழ்த்துகள்.. வைரலாகும் பதிவு இதோ..

தனது நண்பரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நடிகை தீபிகா வைரல் பதிவு இதோ - Kana kaanum kaalangal fame deepika marry her co star | Galatta

விஜய் தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களாக ஒளிபரப்பாகி ரசிகர்களின் மிகபெரிய ஆதரவை பெற்ற தொடர் ‘கனா கானும்ம் காலங்கள்’. தற்போது புது வடிவில் நவீன முறையில் சமகால பள்ளி கதைகளத்தில் கதையமைத்து டிஸ்னி பிளஸ் ஹாட்சாரில் ‘கனா காணும் காலங்கள்’ இணைய தொடர் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. முதல் சீசனை போலவே தற்போது ஒளிப்பரப்பாகி வரும் இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் தங்கள் வரவேற்பை அளித்து வருகின்றனர்.

இந்த தொடரில் சோசியல் மீடியா பிரபலம் தீபிகா அதே தொடரில் கௌதம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஜ வெற்றியை காதலித்து வருவதாக சமூக வலைதளங்களில் முன்னதாக பல கருத்துகள் பகிரப்பட்டு வந்தது. ராஜ வெற்றியும் தீபிகாவை போல் சோஷியல் மீடியா பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை தீபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலை தனது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதன்படி தனது நண்பரும் சக நடிகருமான ராஜ வெற்றியை திருமணம் செய்யவிருப்பாதாக தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “எப்போதும் எங்களிடையே நட்பு ஒன்று நிலைத்து நிற்கும்.. நண்பனே எனக்கு காதலன் ஆனால் அதுதான் சரித்திரமோ  என்பதை இன்று உணர்கிறேன். ஆம், உங்களுடைய தீபிகாவும் ராஜ வெற்றி பிரபுவும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறோம். எங்கள் காதல் கதை இப்படி அழகாக எழுதப்படும் என்று கனவில் கூட நினைத்ததில்லை. எங்களை பிரபஞ்சம் சரியான நேரத்தில் ஆசிர்வதித்து ஒன்று சேர்த்து உள்ளது. உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம். எங்களுடைய பயணத்தில் முக்கிய அங்கமாக நீங்கள் இருப்பீர்கள்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

A post shared by Deepika Venkatachalam (@deepika_v__)

இதையடுத்து இவர்களின் பதிவின் கீழ் அவரவர்களின் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த மாதமே இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இவர்களின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 

‘அக நக’ பாடலின் முழு வீடியோவை வெளியிட்ட படக்குழு... உற்சாகத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..
சினிமா

‘அக நக’ பாடலின் முழு வீடியோவை வெளியிட்ட படக்குழு... உற்சாகத்தில் பொன்னியின் செல்வன் ரசிகர்கள் – அட்டகாசமான Glimpse இதோ..

“மாமன்னன் அண்ணனுடைய கடைசி படமா?..” உண்மையை உடைத்த அருள்நிதி.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..
சினிமா

“மாமன்னன் அண்ணனுடைய கடைசி படமா?..” உண்மையை உடைத்த அருள்நிதி.. - சுவாரஸ்யமான நேர்காணல் இதோ..

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..
சினிமா

சமுத்திரக்கனி, பவன் கல்யாண் கூட்டணியில் ரீமேக்காகும் ‘வினோதய சித்தம்’.. – அட்டகாசமான டைட்டிலுடன் வைரலாகும் Glimpse இதோ..