திருச்சிற்றம்பலம் ஒரு வருட கொண்டாட்டம்: தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் & பட்டக்குழு இணைந்த செம்ம செலிப்ரேஷன்! வைரல் புகைப்படங்கள்

தனுஷின் திருச்சிற்றம்பலம் பட ஒரு வருட கொண்டாட்டம்,One year of thiruchitrambalam celebration dhanush nithya menon | Galatta

இந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு செய்ததை பட குழுவினர் தற்போது கொண்டாடியுள்ளனர். தனது கடின உழைப்பால் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் ராக்கி மற்றும் சாணிக் காயிதம் ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

அடுத்ததாக, தனது முதல் ஹிந்தி படமாக தனுஷ் நடித்த ராஞ்ஜனா (தமிழில் அம்பிகாபதி) மற்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த அத்ராங்கி ரே (தமிழில் கலாட்டா கல்யாணம்) ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தனுஷ் - ஆனந்த்.எல்.ராய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியின் தேரே இஸ்க் மெய்ன் எனும் புதிய ஹிந்தி படம் இணைந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து தனது திரை பயணத்தில் 50-வது திரைப்படமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இந்த D50 திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதன் பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் பிரம்மாண்டமான ஒரு திரைப்படத்தை தயாரிக்கிறார். மேலும் முன்னணி தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் பேன் இந்தியா படமாக உருவாகும் D51 படத்திலும் அடுத்து நடிக்க இருக்கிறார்.

முன்னதாக தனது யாரடி நீ மோகினி, குட்டி மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட்டானது. தனுஷ் உடன் இணைந்து திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்ன GK படத்தொகுப்பு செய்ய, அனிருத் இசையமைத்தார். நல்ல ஃபீல் குட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு 100 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் திருச்சிற்றம்பலம் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு கடந்துள்ளதை ரசிகர்களும் படக்குழுவினரும் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், இயக்குனர் மித்ரன் ஜவஹர், அறந்தாங்கி நிஷா, ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் உட்பட படக்குழுவினர் இணைந்த 1 YEAR OF திருச்சிற்றம்பலம் செலிப்ரேஷன் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த சந்திப்பின் புகைப்படங்களை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

1 year of #Thiruchitrambalam ♥️♥️♥️♥️ pic.twitter.com/xWqaF8j43d

— Dhanush (@dhanushkraja) August 18, 2023