‘இந்த கதை என்னுடைய 20-30 வருஷ ஆதங்கம்!’- மாமன்னன் பட 50வது நாள் விழாவில் மனம் திறந்த ARரஹ்மான்! ட்ரெண்டிங் வீடியோ 

மாமன்னன் பட 50வது நாள் விழாவில் மனம் திறந்து பேசிய ARரஹ்மான்,Ar rahman opens about maamannan in 50th day celebration | Galatta

தனக்கென தனி பாணியில் தொடர்ந்து சமூக நீதி பேசும் திரைப்படங்களாக பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் என தனது முதல் இரண்டு படங்களிலேயே பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் தனது 3வது முக்கிய படைப்பாக உருவாக்கிய மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியானது. தற்சமயம் தமிழ் நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பதால் மொத்தமாக சினிமாவில் இருந்து விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படம் தான் அவரது கடைசி படம்.

உதயநிதி ஸ்டாலின் பகத் பாசில் வைகைப்புயல் வடிவேலு கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை மாமன்னன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க தேனி ஈஸ்வர் அவர்களின் ஒளிப்பதிவில், ஆர்.கே.செல்வா படத்தொகுப்பு செய்திருக்கும் மாமன்னன் படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதியிருக்கிறார். கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான மாமன்னன் உலக அளவில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தது. இதனிடையே தற்போது மாமன்னன் திரைப்படத்தில் 50ஆவது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்றது

இந்த நிலையில் தற்போது மாமன்னன் புகைப்படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றிவிழாவில் பேசிய இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள், “எல்லா புகழும் இறைவனுக்கே!” என தனது பாணியில் பேசத் தொடங்கினார். “இந்த கதை வந்து என்னுடைய 20 - 30 வருஷ ஆதங்கம்… ஏன் இது மாதிரி நடக்கிறது என்று, என்னால் இசையில் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் யார் செய்கிறார்களோ அவர்களோடு இணைந்து விட்டேன். அதுவும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தயாரிப்பில் மாரி செல்வராஜ் அவர்கள் கதை சொல்லும் போதே அது இவ்வளவு நன்றாக வரும் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு FOLK திரைப்படம் மாதிரி இருக்கும் அதற்குள் ஒரு ART. குறிப்பாக படத்தின் முதல் பாதி.. எனக்குப் பிடித்த ART பட இயக்குனர்களுடைய சாயலில் மிகவும் ஒரிஜினலாக இருந்ததாக உணர்ந்தேன். மேலும் என்னுடைய ஃபேவரட் வடிவேலு சார். அவருடைய ஒரு ஷாட் பார்த்தேன் அதிலேயே இந்த படத்தில் அட்டகாசமாக பணியாற்ற வேண்டும் என முடிவு செய்து விட்டேன். பைக்கில் உதய் போய்க் கொண்டிருக்கும் போது பின்னால் அமர்ந்து கொண்டு அவர் இப்படி பார்த்தபடியே வருவார். அதில் அவ்வளவு விஷயம்… அவரது கண்ணில் அதெல்லாம் பார்த்த பிறகு இன்னும் நிறைய தோன்றியது அதிலிருந்து தான் அந்த பாட்டுடைய ஐடியாவை எடுத்தோம். மேலும் படத்துடைய செட் டிசைன் படத்தில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அந்த நாய், பன்றி என எல்லாம் சிறப்பாக இருந்தது.” என்று பேசினார். மாமன்னன் திரைப்படத்தின் ஐம்பதாவது நாள் வெற்றி விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் பேசிய அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.