தங்கலான் பட மிரட்டலான கேரக்டருக்கு பின் சீயான் விக்ரமின் புது அட்டகாசமான லுக்... பீமா உடன் ஒப்பிடும் ரசிகர்கள்! வைரல் புகைப்படங்கள் இதோ

தங்கலான் படத்திற்கு பிறகு சீயான் விக்ரமின் புதிய லுக்,chiyaan vikram in new look after thangalaan movie | Galatta

இந்திய சினிமாவில் தனி சிறப்பு மிக்க நடிகராக படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்வித்து வருபவர் சீயான் விக்ரம். அந்த வகையில் கடைசியாக இயக்குனர் மணிரத்தினத்தின் மாபெரும் வெற்றிப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் ரசிகர்களின் மனதை வென்ற சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர இருக்கும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்க பக்கா ஸ்டைலான ஆக்சன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்த நிலையில் இந்த 2023 ஆம் ஆண்டில் விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

முன்னதாக முதல் முறையாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களோடு இணைந்திருக்கும் திரைப்படம் தங்கலான். சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி ஆகியோர் முக்கிய வேடங்களில் தங்கலான் நடித்துள்ளனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் தங்கலான் திரைப்படத்திற்கு GV.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் KE.ஞானவேல் ராஜா அவர்கள் தயாரிக்க, இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து வழங்க, 1800-களின் காலகட்டத்தில் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற வரலாற்று சம்பவத்தை மையமாக வைத்து பக்கா பீரியட் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. பிரம்மாண்டமாக 3D தொழில்நுட்பத்தில் PAN INDIA படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தங்கலான் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக தங்கலான் திரைப்படத்தின் கதாபாத்திரத்திற்காக மிரட்டலான லுக்கில் இருந்த சீயான் விக்ரம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அந்த கெட்டப்பை மாற்றினார். இந்த நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட புதிய ஸ்டைலான லுக்கில் இருக்கும் தனது புதிய புகைப்படங்களை விக்ரம் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். முன்னதாக நேற்று ஆகஸ்ட் 18ஆம் தேதி பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சீயான் விக்ரம் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகி வைரலான நிலையில், தற்போது அந்த ஸ்டைலான லுக்கில் இருக்கும் புதிய புகைப்படங்களை சீயான் விக்ரம் வெளியிட்டதும் அந்த புகைப்படங்களை பீமா திரைப்படத்தில் விக்ரமின் லுக் உடன் ஒப்பிட்டு சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். சீயான் விக்ரமின் அட்டகாசமான அந்த புகைப்படங்கள் இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Vikram (@the_real_chiyaan)