ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென கண்கலங்கிய மன்சூர் அலிகான்!- காரணம் என்ன? வீடியோ உள்ளே

ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கண்கலங்கிய மன்சூர் அலிகான்,mansoor ali khan cried at galatta fans festival | Galatta

தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த நடிகராக விளங்கும் மன்சூர் அலிகான் அவர்கள், தனக்கென தனி பாணியில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் வில்லன்களில் ஒருவராக திகழ்பவர். வில்லன் நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கூட ஸ்கோர் செய்யும் மன்சூர் அலிகான் அவர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அந்த வகையில் தற்போது மன்சூர் அலிகான் நடிப்பில் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருப்பது திரைப்படம் லியோ தான். ஏற்கனவே மன்சூர் அலிகான் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பல பேட்டிகளில் பேசியதும் கைதி திரைப்படத்தை அவரை மனதில் வைத்து உருவாக்கியது என குறிப்பிட்டதும் ரசிகர்களுக்கு பல ஆர்வத்தை ஏற்படுத்திய நிலையில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருப்பது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலில் நடைபெற்ற ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் மன்சூர் அலிகான் தனக்கே உரித்தான பாணியில் அட்டகாசமாக நமது கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்தார்.  அதன் ஒரு பகுதியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த மன்சூர் அலிகானிடம் ரசிகர் ஒருவர், "நீங்கள் கடைசியாக எப்போது ரொம்ப அழுதீர்கள்?" என கேட்டபோது,  "நான் எல்லாவற்றுக்குமே அழுவேன். அதிகம் உணர்ச்சி வசப்படுவேன். கடைசியாக எப்போது அழுதேன் என்றால்... அழுதிருக்கிறேன். நான் நடிகனாக டிப்ளமோ பட்டம் வாங்கியவன். அழ வேண்டும் என்றால் ஷாட் ரெடி என்றதும் கிளிசரின் போடாமல் அழுவேன்."  என சொல்லி தரையைப் பார்த்தபடி சில வினாடிகள் நின்று கொண்டிருந்த மன்சூர் அலிகான் திடீரென கண் கலங்கினார். ஒரு சில வினாடிகளிலேயே கண்களில் கண்ணீர் வடிய நிமிர்ந்து பார்த்து, "கண்ணீர் வந்ததா?" என கேட்டார். ஒரு நடிகராக தனக்குள் இருக்கும் அசாத்தியமான இந்த திறமையை நொடி பொழுதில் ரசிகர்களுக்கு காண்பித்த மன்சூர் அலி கானின் இந்த செயலை அரங்கில் இருந்த அனைவரும் கைதட்டி பாராட்டினர்.

தொடர்ந்து பேசிய மன்சூர் அலிகான் அவர்கள், "ஆண்களாக பிறந்து விட்டால் அழக்கூடாது அது வேறு விஷயம் இங்கே என்னுடைய மேக்கப் மேன் இருக்கிறார். நாகேஸ்வரராவ் 30 வருடமாக இருக்கிறார். கிளிசரின் போட மாட்டேன் டயலாக் சொல்லும்போது தானாக ஓடும். இந்த மாதிரி கிளிசரின் போட்டு கண்ணை கெடுத்துக் கொள்ள மாட்டேன். இரவு 12 மணிக்கு எழுப்பி சீன் சொல்லி நடிக்க வைத்தாலும் அழுது விடுவேன். அது நடிப்பு.. அந்த நடிப்பை உண்மையாகவே நேசித்து ரசித்து செய்தீர்கள் என்றால் உங்களுக்கும் அந்த கலை வரும். இது மாதிரி அழுவது என்பது ஒரு கலை. தண்ணி அடித்து விட்டு அழக் கூடாது. அது சும்மா.. தண்ணி அடித்து விட்டு சிரிப்பது அழுவது அப்படியெல்லாம் செய்யக்கூடாது. அழுவதினால் கண்களுக்கும் நல்லது. அந்த கழிவுகள் எல்லாம் போய்விடும்." என பேசி இருக்கிறார் இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட நடிகர் மன்சூர் அலி கானின் ரசிகர்கள் கொண்டாட்ட நிகழ்வின் முழு வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.