"ஜெயிலர் 1000 கோடி வசூல் பண்ணிடும்ல!"- எனக்கேட்ட ரெடின் கிங்ஸ்லி.. கை எடுத்து கும்பிட்ட நெல்சன்! கலகலப்பான வீடியோ இதோ

ரெடின் கிங்ஸிலியை கையெடுத்து கும்பிட்ட இயக்குனர் நெல்சன்,redin kingsley speech in jailer movie thanks meet | Galatta

தமிழ் சினிமாவில் குறிப்பிடப்படும் நடிகர்களில் ஒருவராக தற்போது வளர்ந்து வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இயக்குனர் நெல்சன் அவர்களின் கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் களமிறங்கிய ரெடின் கிங்ஸ்லி தொடர்ந்து LKG, கூர்க்கா, A1, டாக்டர், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல், கட்டா குஸ்தி, நாய் சேகர் ரிட்டன்ஸ், பத்து தல, ருத்ரன், டிடி ரிட்டன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அடுத்ததாக விஷால் - எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் மார்க் ஆண்டனி மற்றும் சூர்யாவின் பிரம்மாண்டப் படமான கங்குவா உள்ளிட்ட படங்களிலும் ரெடின் கிங்சிலி நடித்து வருகிறார்.

இதனிடையே இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரெடின் கிங்ஸின் நடித்திருக்கிறார். வழக்கம்போல் தனக்கென தனி ஸ்டைலில் இந்த ஜெயிலர் திரைப்படத்திலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளிவந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் முதல் வார இறுதியில் 375.40 கோடி ரூபாய் வசூலித்து தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் பட குழுவினர் நடத்திய நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய ரெடின் கிங்ஸ்லி அவர்களின் பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. அப்படி பேசும் போது,

“ஒரு வருடத்திற்கு முன்பு இதே இடத்திற்கு ஒரு விழாவிற்கு நான் வந்திருக்கிறேன் அப்போது என்னிடம் ஒருவர் கேட்டார் ஜெய்லர் எப்படி வந்திருக்கிறது என்று வெறித்தனமாக தலைவன் எழுதிக் கொண்டிருக்கிறார் என்று சொன்னேன் அதற்காக திட்டும் வாங்கினேன். ஆனால் அந்த மாதிரி தான் படம் வந்திருக்கிறது. நீங்கள் பார்த்திருப்பீர்கள். பத்து தீபாவளி ஒரே நாளில் வந்தால் எப்படி இருக்கும் அப்படி தான் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வந்தது. இதையெல்லாம் வெற்றியாக கொண்டு போனது முக்கியமாக பிரஸ் தான். ஊடகத்துறையினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு வாரமா காதில் குலோப் ஜாமுன் ஜீரா தண்ணீர் ஊற்றினால் எப்படி இருக்கும் அந்த மாதிரி இந்த பக்கம் 100 கோடி அந்த பக்கம் 100 கோடி அங்கேயும் 100 கோடி இந்த 100 கோடியை விட மாட்டீர்களா என்பது மாதிரி வந்து கொண்டே இருந்தது. எப்படியும் ஒரு ஆயிரம் கோடி வசூல் பண்ணிடும் அல்லவா? என இயக்குனர் நெல்சனை பார்த்து பேச, இயக்குனர் நெல்சன் கையெடுத்து கும்பிட்டு, ஐயா ஆளை விடுங்க என்பது போல ஒரு ரியாக்ஷன் கொடுத்தார். தொடர்ந்து பேசிய ரெடின் கிங்ஸ்லி, "ரஜினி சார் சீக்கிரம் வாங்க சார் ஊரே காத்திருக்கிறது உங்களை கொண்டாட, எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் நன்றியோ நன்றி" என பேசினார். ஜெயிலர் பட குழுவின் இந்த நன்றி தெரிவிக்கும் விழாவின் அந்த முழு வீடியோவை கீழே உள்ள லிங்கை காணலாம்.