தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை நயன்தாரா அடுத்ததாக தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் இணைந்து காட்ஃபாதர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்காக தயாராகும் காட்ஃபாதர் திரைப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார்.

தொடர்ந்து முதல்முறை பாலிவுட் ஹீரோயினாக அறிமுகமாகும் நயன்தாரா இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் LION திரைப்படத்தில் நடிக்கிறார். முன்னதாக பிரேமம் திரைப்படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிருத்திவிராஜ் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த GOLD திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீசாகவுள்ளது.

இதனிடையே நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மீண்டும் நேரடியாக OTTயில் ரிலீசாகவுள்ள திரைப்படம் O2. இயக்குனர் G.S.விக்னேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள O2 திரைப்படத்திற்கு தமிழ்.A.அழகன் ஒளிப்பதிவில் செல்வா படத்தொகுப்பு செய்ய விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ரித்து ராகஸ் யூட்யூப் சேனல் மூலம் பிரபலமடைந்த ரித்விக் நயன்தாராவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் O2 திரைப்படம் விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் O2 படத்தின் அதிகாரபூர்வ டீசர் தற்போது வெளியானது. அந்த டீசர் இதோ…