தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம்வரும் யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பன்னிகுட்டி, சலூன், காசேதான் கடவுளடா உள்ளிட்ட திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளன. முன்னதாக தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #தளபதி66 திரைப்படத்திலும் யோகிபாபு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏலியன்-சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ள யோகிபாபு அடுத்ததாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சுவாரியர் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சென்டிமீட்டர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்திய திரை உலகின் சிறந்த ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகியிருக்கும் ஜாக் அண்ட் ஜில் திரைப்படம் தற்போது தமிழில் சென்டிமீட்டர் என ரிலீசாகிறது. மேலும்  சென்டிமீட்டர் படத்தில் சோபின் சாஹீர், நெடுமுடி வேணு, அஜு வர்கீஸ், ஷைலி கிரிஷன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் மற்றும் சேவாஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள சென்டிமீட்டர் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் ஜேக்ஸ் பிஜாய், ராம் சுரேந்தர் மற்றும் கோபி சுந்தர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சென்டிமீட்டர் படத்தின் கிம் கிம் பாடல் வெளியானது. அந்த கிம் கிம் பாடல் இதோ…