ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று (மே-15) வெளியானது. இந்திய திரை உலகின் ஈடு இணையற்ற கலைஞரான உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஆண்டனி வர்கீஸ், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, சிவானி, மகேஸ்வரி, மைனா நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

உலகநாயகனின் தீவிர ரசிகரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விக்ரம் படத்திற்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் இணைந்து திரைக்கதை-வசனம் எழுதியுள்ளனர். அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகியிருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் விக்ரம் திரைப்படத்தை வெளியிடுகிறது. முன்னதாக விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று (மே 15 ஆம் தேதி) நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு உலகநாயகனின் வெறித்தனமான ஆக்ஷனில் தயாராகியிருக்கும் விக்ரம் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது. ட்ரெண்டாகி வரும் விக்ரம் படத்தின் ட்ரைலர் இதோ…