தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நயன்தாரா,ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர்ஸ்டார் என்று நயன்தாரா அழைக்கப்படுவார்.கடந்த சில வருடங்களாக வித்தியாசமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நயன்தாரா.பெரிய ஹீரோ இல்லாமல் இவர் நடிக்கும் படங்களை பார்ப்பதற்கும் ரசிகர்கள் தயாராக உள்ளனர்.

இவரது படங்கள் முன்னணி ஹீரோ படங்களுக்கு நிகராக வசூலிலும் சாதனை படைக்கும்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து அசத்தி விட்டார் நயன்தாரா.அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து அசத்தி உள்ளார் நயன்தாரா.

இவர் நடித்த மூக்குத்தி அம்மன்,நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் நேரடியாக OTT-யில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது இதனை தொடர்ந்து அண்ணாத்த,காத்துவாக்குல ரெண்டு காதல்,அட்லீ ஷாருக் கான் படம்,அல்போன்ஸ் புத்ரன் இயக்கும் கோல்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நயன்தாரா.

இவர் தெலுங்கில் கோபிசந்துடன் நடித்த Aaradugula Bullet திரைப்படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.2017-ளிலேயே ரிலீசாகி இருக்கவேண்டிய இந்த படம் ஒருவழியாக இந்த மாதம் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.