தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் திகழ்பவர் நடிகை ஜோதிகா. கடைசியாக நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனையடுத்து ஜோதிகாவின் 50-ஆவது திரைப்படமாக தயாராகியுள்ளது உடன்பிறப்பே திரைப்படம். சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் அழகிய குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் உடன்பிறப்பே திரைப்படத்தை இயக்குனர் இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ளார்.

ஜோதிகா, சசிகுமார் மற்றும் சமுத்திரகனி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் உடன்பிறப்பே திரைப்படத்தில் சூரி, கலையரசன், நிவேதிதா, ஷிஜா ரோஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளர் R.வேல்ராஜ் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பு செய்ய இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார்.

அக்டோபர் 14-ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக உடன்பிறப்பே திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீசாகிறது. இந்நிலையில் தற்போது உடன்பிறப்பே திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ஜோதிகாவின் 50-வது திரைப்படமான உடன்பிறப்பே ட்ரெய்லரை கீழே உள்ள லிங்கில் கண்டு மகிழுங்கள்.