சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து இன்று தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளவர் நானி.இவர் நடித்த ஷ்யாம் சிங்கா ராய் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து Ante Sundaraniki என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.தற்போது இந்த படத்தினை அடுத்து இவர் ஹீரோவாக அறிமுக இயக்குனர் ஸ்ரீகாந்த்இயக்கத்தில் தயாராகும் தசரா படத்தில் நடிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் Ante Sundaraniki படத்தை Mental Madhilo,Brochevarevarura உள்ளிட்ட படங்களை இயக்கிய விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.இந்த படத்தின் நஸ்ரியா ஹீரோயினாக நடித்துள்ளார்.இது இவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.விவேக் சாகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.

இந்த படம் ஜூன் 10ஆம் தேதி வெளியாகும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் மொழிகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருநது.தற்போது இந்த படத்தில் நஸ்ரியா டப்பிங் செய்யும் ஜாலியான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது