தளபதி விஜயின் லியோ படத்தோடு மோதும் முன்னணி மாஸ் ஹீரோவின் அதிரடி படம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லியோ படத்துடன் ரிலீஸாகும் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி,nandamuri balakrishna in bhagavanth kesari movie release date announcement | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் அதே சமயத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படமும் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தளபதி விஜயின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பக்கா அதிரடி ஆக்சன் ப்ளாக் திரைப்படமாக உருவாகும் லியோ திரைப்படத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக தளபதி விஜய் இணைந்து இருக்கிறார். முன்னதாக மாஸ்டர் திரைப்படம் 50 சதவீதம் லோகேஷ் படம் 50 சதவீதம் தளபதி விஜய் படம் என இருந்த நிலையில் இந்த லியோ திரைப்படம் 100 சதவீதம் லோகேஷ் படமாக இருக்கும் என ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருப்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.

தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் திரிஷா லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் அனுராக் கஷ்யப், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மறைந்த நடிகர் மனோபாலா, ஜார்ஜ் மர்யன், அபிராமி வெங்கடாசலம், சாந்தி மாயாதேவி மற்றும் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து ஆகியோர் லியோ திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் SS.லலித்குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களில் 125 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது. வருகிற ஆயுத பூஜை வெளியிடாக அக்டோபர் 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.

முன்னதாக தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகர்களின் ஒருவராக விளங்கும் நடிகர் ராம் போத்தினேனி, இயக்குனர் போயபட்டி சீனு இயக்கத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஸ்கந்தா திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி  ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதே தினத்தில் மற்றொரு முன்னணி நடிகரான நந்தாமுரி பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்திருக்கும் பகவந்த் கேசரி திரைப்படமும் ரிலீஸாக இருப்பதாக தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் அணில் ரவிபுடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்திருக்கும் இந்த பகவன்த் கேசரி திரைப்படத்தில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏற்கனவே ஆயுத பூஜை ரேஸில் தளபதி விஜய்யின் லியோ படத்துடன் ராம் போத்தினேனி நடிக்கும் ஸ்கந்தா படம் களமிறங்கும் நிலையில், தற்போது சீனியர் நடிகரான நந்தாமுரி பாலகிருஷ்ணாவின் பகவத் கேசரி படமும் களமிறங்குவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். நந்தாமரி பாலகிருஷ்ணாவின் பகவத் கேஸரி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு இதோ…
 

భగవంత్ కేసరి ఆయుధ పూజతో గీ సారి దసరా జోర్దారుంటది🔥#Bhagavanthkesari Grand Worldwide Release on October 19th, 2023💥#BhagavanthKesariOnOCT19

Natasimham #NandamuriBalakrishna @AnilRavipudi @MsKajalAggarwal @sreeleela14 @rampalarjun @MusicThaman @JungleeMusicSTH @sahugarapati7pic.twitter.com/2uAeo5wWRH

— Shine Screens (@Shine_Screens) July 22, 2023

சூர்யாவின் பிறந்தநாளுக்கு பக்கா மாஸ் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு... இணையத்தை அதிரவிடும் மிரட்டலான GLIMPSE இதோ!
சினிமா

சூர்யாவின் பிறந்தநாளுக்கு பக்கா மாஸ் ட்ரீட் கொடுத்த கங்குவா படக்குழு... இணையத்தை அதிரவிடும் மிரட்டலான GLIMPSE இதோ!

சினிமா

"மாவீரன் பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்த காரணம் இது தான்... உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்! வைரல் வீடியோ

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் காம்போவின் அதிரடியான புது வெப் சீரிஸ்... விறுவிறுப்பான மத்தகம் டீசர் இதோ!
சினிமா

அதர்வா - கௌதம் மேனன் - 'குட் நைட்' மணிகண்டன் காம்போவின் அதிரடியான புது வெப் சீரிஸ்... விறுவிறுப்பான மத்தகம் டீசர் இதோ!