தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேராதரவோடு கடந்த ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 3) முதல் பிரம்மாண்டமாக தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 5. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் முதல் முறையாக 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினர்.

முதல் நாளான திங்கட்கிழமை (அக்டோபர் 4)முதல் வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்ட  நிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கடந்து வந்த பாதை சுற்று தொடங்கியது. இந்த சுற்றில் முதலில் பேசிய பாடகிகள் இசைவாணி மற்றும் சின்னபொண்ணு ஆகியோரின் கடந்து வந்த பாதை மற்ற ஹவுஸ் மேட்ஸை எமோஷ்னலாக்கியது.

தொடர்ந்து நேற்றும் (அக்டோபர் 6)  கடந்து வந்த பாதை சுற்று தொடர்ந்தது. இதில் முதலில் பேசிய இமான் அண்ணாச்சி தனக்கே உரித்தான பாணியில் தனது கடினமான பயணத்தை நகைச்சுவையோடு பகிர்ந்து கொள்ள சிபி, நிரூப் மற்றும் அபிஷேக் இடையே மாற்றுக்கருத்துகளும் சற்று சலசலப்பு ஏற்பட்டது. அடுத்து பேசிய சுருதியின் கடந்து வந்த பாதையும் உருக்கமாக இருந்தது.

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 7) நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. இதில் நமீதா, அவரது வாழ்கையில் கடந்து வந்த மிக கடினமான பாதை பற்றி கண்ணீரோடு மிகவும் உருக்கமாக பேச ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் கண் கலங்கினர். எமோஷ்னலான அந்த ப்ரோமோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.