சாய் பல்லவியின் ரொமான்டிக்கான லவ் ஸ்டோரி ட்ரைலர் !
By Aravind Selvam | Galatta | September 13, 2021 15:27 PM IST

ப்ரேமம் படத்தின் மூலம் தென் இந்தியாவின் Favourite நடிகையானவர் சாய் பல்லவி.நடிப்பு,நடனம் என என்னவாக இருந்தாலும் அடிச்சு தூள் கிளம்புவார் சாய் பல்லவி.தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த இவர்,இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தியா படத்தின் மூலம் தமிழில்அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியான NGK,தனுஷ் நடிப்பில் மாரி 2 என்று தமிழிலும் பெரிய ஹீரோக்களுடன் இணைந்து அசத்தினார்.மாரி 2 படத்தில் இடம்பெற்ற Rowdy Baby பாடலில் இவரது நடனத்தை பாராட்டாதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.இதனை தொடர்ந்து சில படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.
மானாட மயிலாட உள்ளிட்ட ஷோக்களில் பங்கேற்று வந்த சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.சாய் பல்லவியின் நடிப்பை தாண்டி அவரது நடனத்திற்கென்றே தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வீடியோ,போட்டோக்களை பதிவிட்டு வருவார் சாய் பல்லவி.
இவர் அடுத்ததாக சில முக்கிய படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன,நாக சைதன்யாவுடன் இவர் நடித்துள்ள லவ் ஸ்டோரி படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது,விறுவிறுப்பான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Evanukku Engeyo Matcham Irukku heroine Ashna Zaveri's Facebook page gets hacked
13/09/2021 05:30 PM
WATCH: First 7 Minutes of Harbhajan Singh's Friendship Movie | Losliya | Arjun
13/09/2021 05:25 PM
Arya's Aranmanai 3 - New Romantic Song Released | Rasavaachiye | Sundar C
13/09/2021 03:25 PM