விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து சில காரணங்களால் இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த தொடர் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.ஜனனி அசோக் குமார்,காயத்ரி யுவராஜ்,ராஜுமோஹன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 வெற்றிகரமாக 200 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.தற்போது இந்த தொடரில் புது எண்ட்ரியாக நாம் இருவர் நமக்கு இருவர் முதல் சீசனில் முக்கிய வேடத்தில் நடித்த சசிந்தர் வருகிறார்.இது கௌரவ தோற்றமா இல்லையா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதன் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.