சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் மிர்ச்சி செந்தில்.இந்த தொடரின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாப்பிள்ளை தொடரில் நடித்திருந்தார்.தனது மனைவி ஸ்ரீஜாவுடன் நடித்த இந்த தொடரும் பெரிய வெற்றியை பெற்றது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் சில முக்கிய முன்னணி நடிகர்கள் குறிப்பாக ஹீரோயின்கள் இருவரும் கலந்துகொள்ள முடியாததால் அந்த கதையா அப்படியே முடித்து விட்டு புதிய கதைக்களத்தோடு இந்த தொடரின் இரண்டாவது சீசன் இன்று முதல் தொடங்குகிறது.

நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்தது.இது குறித்த அறிவிப்பை சில நாட்களுக்கு முன் விஜய் டிவி வெளியிட்டது.இன்று முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ள நிலையில் இந்த தொடர் குறித்த முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.முதல் சீசனில் ஹீரோ செந்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்,ஆனால் இந்த சீசனில் அதற்கு மாறாக ஹீரோயின் ரச்சிதா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.