தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் மிஷ்கின், தனக்கே உரித்தான பாணியில் சிறந்த படைப்புகளை தமிழ் சினிமாவுக்கு வழங்கி வருகிறார். இயக்குனர் மிஷ்கினின் திரைப்படங்களுக்கு என்று எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அந்த வகையில் இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படைப்பாக வெளிவருகிறது பிசாசு ||.

கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஹாரர் த்ரில்லர் திரைப்படமான பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிசாசு || திரைப்படம் தற்போது தயாராகியுள்ளது. பிசாசு || திரைப்படத்தை இயக்குனர் மிஷ்கின் எழுதி இயக்க தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, மிஷ்கினின் சைக்கோ படத்தில் நடித்த ராஜ்குமார் பிச்சுமணி, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் மற்றும் அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கௌரவ தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் பிசாசு || பட முதல் பாடலாக இதயத்தை வருடும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் “உறவின் பாட்டு” என வெளியாகிறது “உச்சந்தல ரேகையிலே” பாடல். வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி உச்சந்தல ரேகையிலே பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பிசாசு || படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.