‘டீசல்’ படத்தின் அட்டகாசமான அப்டேட்.. வேற மாதிரி களம் இறங்க போகும் ஹரிஷ் கல்யாண் - வைரலாகும் வீடியோ இதோ..

அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்ட ஹரிஷ் கல்யாண் டீசல் படக்குழு - Harish kalyan Diesel movie beer song update | Galatta

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் முக்கியமானவர் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் அறிமுகமானாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தார்.அதன் பின் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ‘பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்து இளைஞர்களுக்கு பிடித்த கதாநாயகனாக மாறினார். அதனை தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்,’தனுசு ராசி நேயர்களே, ‘தாரள பிரபு, ‘ஒ மணப்பெண்ணே’ ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தெரிந்த முகமாக வளர்ந்தார். ஹரிஷ் கல்யான் சாக்லெட் பாயாக வலம் வந்து தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். மேலும் இவர் எம் எஸ் தோனி தயாரிப்பில் உருவாகி வரும் ‘எல்.ஜி.எம்’ திரைப்படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் புதிதாக நடிக்கபோகும் திரைப்படமான ‘டீசல் படத்தின் முதல் பார்வை வெளியானது. பெட்ரோல் பங்கில் டீசல் குழாயுடன் ஆக்ரோஷமா நிற்கும் ஹரிஷ் கல்யாண் புகைப்படம் இணையத்தில் வைரலானது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிகை அதுல்யா ரவி நடிக்கின்றார். மேலும் இவர்களுடன் வினய், விவேக் பிரசன்னா, தங்கதுரை,அனன்யா, கலக்க போவது யாரு தீனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் திபு தினன் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் எம்.எஸ் பிரபு. முன்னதாக படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படபிடிப்பு காட்சிகள் ஹரிஷ் கல்யான் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.  அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக முழுக்க முழுக்க உருவாகவுள்ளதால் படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உருவானது, இந்நிலையில் படம் குறித்த புது அப்டேட்டை ஹரிஷ் கல்யான் லுங்கி கட்டி கொண்டு ரோஜா பூ ஏந்தி நிற்பது போன்ற புகைப்படமும் அதுல்யா ரவி பீர் பாட்டில் புகைப்படமும் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

Hey @iamharishkalyan
10000 beer ok ah ?? #Diesel #dieselupdate Today 5PM ! pic.twitter.com/ITjwJ6Xc3V

— Athulyaa Ravi (@AthulyaOfficial) February 8, 2023

dhanush starrer vaathi mass audio launch telecast on suntv

No… All i need is ❤️🌹 @AthulyaOfficial #Diesel #dieselupdate Today 5PM ! pic.twitter.com/ETJUqiGscD

— Harish Kalyan (@iamharishkalyan) February 8, 2023

அதன்படி டீசல் படத்தின் புது பாடலுக்கான புரோமோ வீடியோவை  வெளியிட்டுள்ளது படக்குழு. அட்டகாசமான கானா மூலம் ‘பீர் சாங்’ என்ற பெயரில் உள்ள புரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. விரைவில் பாடல் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுவரை ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த ஹரிஷ் கல்யான்  இந்த படத்தில் முழுக்க முழுக்க ஆக்ஷனில் இறங்கவுள்ளதால் இந்த படத்திற்கு தனி எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Love meets Gana.
Pullingala, are you ready to vibe to the #BeerSong 🍻🌹from #Diesel

A @dhibuofficial musical, coming soon. @AthulyaOfficial @shan_dir@devarajulu29 @ThirdEye_Films @thespcinemas @thinkmusicindia pic.twitter.com/jPjYTmeYaV

— Harish Kalyan (@iamharishkalyan) February 8, 2023

சிலம்பரசனின் 'பத்து தல' இயக்குனருக்கு ஏஆர் ரஹ்மான் சொன்ன Advice.. – சுவராஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ இதோ..
சினிமா

சிலம்பரசனின் 'பத்து தல' இயக்குனருக்கு ஏஆர் ரஹ்மான் சொன்ன Advice.. – சுவராஸ்யமான தகவல்களுடன் முழு வீடியோ இதோ..

டிரண்டாகும் கவினின் டாடா பட பாடல்.. – யுவன் குரலில் ‘போகாதே’ பாடலின்  Special Video இதோ..
சினிமா

டிரண்டாகும் கவினின் டாடா பட பாடல்.. – யுவன் குரலில் ‘போகாதே’ பாடலின் Special Video இதோ..

சங்கர் பட நடிகையை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகர்.. - குவியும் வாழ்த்துக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

சங்கர் பட நடிகையை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகர்.. - குவியும் வாழ்த்துக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..