சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜெயிலர் படத்தின் ஆக்சன் டீம்... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் டெய்லர் பட ஆக்சன் டீம்,Jailer acton director stun shiva met super star rajinikanth with his sons | Galatta

அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் மனம் கவர்ந்த சூப்பர் ஸ்டாராக தனக்கென தனி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படையப்பா படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன், நடிகை ரம்யா கிருஷ்ணன் முன்னணி வேடத்தில் நடிக்கும், ஜெயிலர் திரைப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோருடன் நடிகை தமன்னாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் தரமணி & ராக்கி படங்களின் நடிகர் வசந்த் ரவி, யோகி பாபு, மலையாள விநாயகன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ரசிகர்களின் ஃபேவரட் இசையமைப்பாளரான ராக்ஸ்டார் அனிருத் பேட்ட மற்றும் தர்பார் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் விதமாக ஜெயிலர் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். பக்கா ஆக்சன் என்டர்டெய்னிங் திரைப்படமாக தயாராகும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே ஜெயிலர் திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனரான ஸ்டண் சிவா தனது இரு மகன்களும் ஸ்டண்ட் இயக்குனர்களுமான கெவின் குமார் மற்றும் ஸ்டீவன் குமார் ஆகியோரோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்த இந்த அழகிய நிகழ்வின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டண் சிவா அவர்கள், “என்னுடைய முதல் ஷூட்டிங் ஸ்பாட்டான கர்ஜனை எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக அவரோடு பணியாற்றுகிறேன்.  என் வாழ்வின் அற்புதமான இந்த பயணத்திற்கு கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்தப் பதிவு இதோ…
 

 

View this post on Instagram

A post shared by Stun Shiva (@stunshiva_)

அதிரடி ஆக்ஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்... சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியீடு!
சினிமா

அதிரடி ஆக்ஷன் படத்தின் ஸ்டண்ட் காட்சி படப்பிடிப்பில் காயமடைந்த அருண் விஜய்... சிகிச்சை பெறும் புகைப்படங்கள் வெளியீடு!

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!
சினிமா

ரெட் ஜெயன்ட் மூவிஸ் - பிக் பாஸ் கவினின் கலக்கலான டாடா... கலகலப்பான ஸ்னீக் பிக் வீடியோ இதோ!

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!
சினிமா

காந்தாரா 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரிஷப் ஷெட்டி... 100வது நாள் கொண்டாட்டத்தில் மாஸான அறிவிப்பு!