தனுஷின் ‘வாத்தி’ இசை வெளியீட்டு விழா.. தொலைக்காட்சி வெளியீடு எப்போது.. – அட்டகாசமான அறிவிப்பு வீடியோ..

தனுஷின் வாத்தி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தொலைக்காட்சி ஒளிப்பரப்பு தேதி அறிவிப்பு - Dhanush Vaathi Audio Launch on Suntv | Galatta

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘வாத்தி’.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். மேலும்  சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் வாத்தி திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் பிப்ரவரி 17 ம் தேதி வெளியாகவிருக்கின்றது. கல்வியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் தனுஷ் ஆசிரியராக நடிக்கிறார். அவருடன் இணைந்து சம்யுக்தா, சமுத்திரக்கனி, சாய் குமார், ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் தனுஷ், சம்யுக்தா , சமுத்திர கனி மற்றும் திரைக்கலைஞர்கள் பங்கு பெற்றனர். மேலும் இயக்குனர் பாரதி ராஜா மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். ரசிகர்களின் ஆரவாரத்துடன் அவர்கள் முன்னிலையில் படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டது. ஐந்து பாடல்கள் கொண்ட தொகுப்பாக உள்ள வாத்தி ஆல்பத்தில் வா வாத்தி, நாடோடி மன்னன்,கலங்குதே,One Life, சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் இடம் பெற்றிருந்தன. பாடல்கள் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வரும் நிலையில் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியை தொலைகாட்சியில் எப்போது ஒளிபரப்பாகும் என்ற ஆவல் இருந்த நிலையில் தற்போது சன் தொலைக்காட்சி இசை வெளியீட்டு விழாவிற்கான சிறப்பு வீடியோவை வெளியிட்டது.

Dhanush starrer Vaathi's Mass Audio Launch 🔥..

Sunday | 12.30 PM.#SunTV #VaathiAudioLaunchOnSunTV #Dhanush #Vaathi @dhanushkraja
#VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas @7screenstudio #SrikaraStudios pic.twitter.com/ykJFzMQBhB

— Sun TV (@SunTV) February 7, 2023

வரும் பிப்ரவரி 12 ம் தேதி மதியம் 12.30மணியளவில் வாத்தி இசைவெளியீட்டு விழா ஒளிபாரப்பாகவுள்ளது என சிறப்பு வீடியோவை சன் டீவி வெளியிட்டது. இதனையடுத்து தனுஷின் அட்டகாசமான பேச்சுடன் வெளியிட்டிருக்கும் புரோமோ வீடியோ ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  

டிரண்டாகும் கவினின் டாடா பட பாடல்.. – யுவன் குரலில் ‘போகாதே’ பாடலின்  Special Video இதோ..
சினிமா

டிரண்டாகும் கவினின் டாடா பட பாடல்.. – யுவன் குரலில் ‘போகாதே’ பாடலின் Special Video இதோ..

சங்கர் பட நடிகையை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகர்.. - குவியும் வாழ்த்துக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..
சினிமா

சங்கர் பட நடிகையை கரம் பிடித்த பிரபல பாலிவுட் நடிகர்.. - குவியும் வாழ்த்துக்கள்.. வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

விஜய் ரசிகர்களுக்கு Special treat.. வெளியானது அட்டகாசமான ‘வா தலைவா’ பாடல்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்
சினிமா

விஜய் ரசிகர்களுக்கு Special treat.. வெளியானது அட்டகாசமான ‘வா தலைவா’ பாடல்.. – உற்சாகத்தில் ரசிகர்கள்