இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ் ஜே சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக மூன்று மொழிகளில் உருவாகி வரும் பான் இந்திய திரைப்படம் RC 15. இப்படத்தின் சில காட்சிகள் மற்றும் பாடல்கள் முன்னதாக படமாக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் இடைக்காலத்தில் இடைவெளி விட்டு தற்போது இயக்குனர் சங்கர் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் சங்கரின் RC15 படத்தின் கதாநாயகியான கியாரா அத்வானி தன் காதலரான பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கொத்ராவினை திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 2018 ல் வெளியான ஆந்தாலாஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தின் போது கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இவர்கள் இருவரும் சந்தித்து கொண்டனர். அதன்பின் அஜித்தின் பில்லா, ஆரம்பம் பட இயக்குனர் விஷ்ணுவரதன் இயக்கத்தில் வெளியான 'செர்ஷா' படத்தின் மூலம் மீண்டும் திரையில் ஒன்றாக தோன்றினார். இந்த திரைப்படம் அதிகளவு பேசப்பட்டது. மேலும் அதே நேரத்தில் இருவரது காதலும் திரையுலகில் பேசப்பட்டது. நீண்ட நாள்களாகவே காதல் பந்தத்தில் இருந்த இவர்கள் தற்போது கணவன் மனைவியாக இணைந்துள்ளனர்.
இவர்களின் திருமணம் ராஜஸ்தான் ஜெய்சால்மரில் கோலாகல கொண்டாட்டத்துடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குனர் கரன் ஜோகர், ரோஹித் ஷெட்டி என பாலிவுட்டின் முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் மகேஷ் பாபு உள்ளிட்ட பல முன்னனி பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் வந்த வண்ணம் உள்ளது. தற்போது திருமண நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கியாரா அத்வானி மற்றும் சித்தார்த் மல்கோத்ரா இருவரும் தங்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் கியரா மற்றும் சித்தார்த் “எங்களின் புதிய பயணத்தில் உங்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் வேண்டுகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்கள். இதனையடுத்து ரசிகர்கள் திரைபிரபலங்கள் தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.
“Ab humari permanent booking hogayi hai”
— Kiara Advani (@advani_kiara) February 7, 2023
We seek your blessings and love on our journey ahead ❤️🙏 pic.twitter.com/AlBjfKrPtp
பிரபல பாலிவுட் நடிகையான கியாரா அத்வானி எம்.எஸ் தோனி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர். அதன் பின் லஸ்ட் ஸ்டோரிஸ், கபீர் சிங் போன்ற பல வெற்றிப்படங்களில் நடித்தவர். இந்தி மட்டுமல்லாமல் தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ‘பரத் அனே நேனு’ படத்திலும் ராம் சரண் நடிப்பில் வெளியான ‘வினய விதய ராமா’ படத்திலும் நடித்துள்ளார்.தற்போது சங்கர் இயக்கத்தில் பான் இந்தியா படமான RC 15 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.