கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை தன் இசையால் மகிழ்வித்து வரும் இசையமைப்பாளர் டி.இமான் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்கிறார். தளபதி விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி சமீபத்தில் சூர்யா நடித்து வெளிவந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரை 100 படங்களுக்கு மேல் டி.இமான் இசை அமைத்துள்ளார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், அஜித் குமார், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி, ஆர்யா, விஷால் என நட்சத்திர நாயகர்கள் அனைவரது படங்களுக்கும் இசையமைத்து சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த டி.இமான் இசையில் இந்த ஆண்டு(2022) இன்னும் பல படங்கள் வெளிவர உள்ளன.

முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் அவரது  முதல் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமானின் மறுமணம் நடைபெற்றுள்ளது. மறைந்த பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் அமலியை இசையமைப்பாளர் டி.இமான் திருமணம் செய்து கொண்டார்.

இசையமைப்பாளர் டி.இமானின் மறுமணத்திற்கு திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது மறுமணம் குறித்து மனம் திறந்துள்ள டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை இதோ…