தமிழ் திரையுலகின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் ஃபேன்டசி அட்வென்சர் த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ள மாயோன் திரைப்படம் வருகிற ஜூன் 17-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. மாயோன் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சிபி சத்யராஜ். முன்னதாக இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் நடித்துள்ள ரேஞ்சர் மற்றும் இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள வட்டம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக சிபி சத்யராஜ் நடித்துள்ள ரங்கா திரைப்படம் கடந்த மே 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது. சிபி சத்யராஜ் உடன் இணைந்து நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க சதீஷ், மோனிஷ் ரேகா, மனோ பாலா மற்றும் ஷா ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

இயக்குனர் வினோத்.DL இயக்கத்தில் பாஸ் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ரங்கா படத்திற்கு அர்வி ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பு செய்ய, ரங்கா ராம் ஜீவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ரங்கா திரைப்படத்திலிருந்து புதிய Sneak Peek வீடியோ வெளியானது. அந்த Sneak Peek வீடியோ இதோ...