தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் #AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் H.வினோத் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்தார். இதனை தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் இயக்குனர் H.வினோத் கூட்டணியில் இந்த ஆண்டு(2022) வெளிவந்த வலிமை படமும் மெகா ஹிட்டானது.

இதனிடையே தற்போது மூன்றாவது முறையாக H.வினோத்-அஜித்குமார் கூட்டணியில் #AK61 திரைப்படம் தயாராகி வருகிறது. இதனைத்தொடர்ந்து முதல் முறை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் #AK62 படத்தில் அஜித் குமார் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான நெகட்டிவ் கதாபாத்திரத்தில் #AK61 திரைப்படத்தில் அஜித்குமார் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் தற்போது #AK61 திரைப்படத்திற்காக ஸ்டைலான லுக்கில் அஜித்குமார் இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சோசியல் மீடியாவில் வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ…