செயின் ஸ்னாட்சிங்கை மையப்படுத்தி வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த திரைப்படம் மெட்ரோ. ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் படமாக இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த மெட்ரோ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் சிரிஷ் சரவணன்.

மெட்ரோ திரைப்படத்திலிருந்து மெட்ரோ சிரஷ் அழைக்கப்படும் இவர், தொடர்ந்து இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் நடித்து வெளிவந்த ராஜா ரங்குஸ்கி திரைப்படமும் ரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து ப்ரியா பவானி சங்கர் உடன் இணைந்து மெட்ரோ சிரிஷ் முன்னணி வேடத்தில் நடித்த திரைப்படம் பிளட் மணி.

இயக்குனர் சர்ஜுன்.KM இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடித்த பிளட் மணி திரைப்படம் கடைசியாக நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளிவந்தது. இதனிடையே இயக்குனர் M.ரமேஷ் பாரதி இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ் நடித்துள்ள திரைப்படம் பிஸ்தா. மிருதுலா முரளி கதாநாயகியாக நடிக்க, அருந்ததி நாயர், சதீஷ், நகைச்சுவை நடிகர் செந்தில், யோகிபாபு உள்ளிட்ட பலர் பிஸ்தா படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒன் மேன் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பிஸ்தா படத்திற்கு M.விஜய் ஒளிப்பதிவில், M.ரமேஷ் பாரதி படத்தொகுப்பு செய்துள்ளார்.  தனது 25வது திரைப்படமாக பிஸ்தா படத்திற்கு இசை அமைத்துள்ளார் இசையமைப்பாளர் தரண் குமார். இந்நிலையில் பிஸ்தா திரைப்படத்திலிருந்து ஆத்தாடி பாத்தேனே பாடல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் பாடல் இதோ…