தளபதி 68 அப்டேட்: "நண்பர்களே இது ஒரு EPIC.."- மீனாக்ஷி சௌத்ரி கொடுத்த ஸ்பெஷல் செய்தி... கொண்டாட்டத்தில் தளபதி விஜய் ரசிகர்கள்!

விஜயின் தளபதி 68 பட அப்டேட் கொடுத்த மீனாக்ஷி சௌத்ரி,meenakshi chaudhary shared update of vijay in thalapathy 68 movie update | Galatta

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை மீனாக்ஷி சௌத்ரி, தளபதி 68 திரைப்படம் குறித்து ருசிகர தகவலை நம்மோடு பகிர்ந்து கொண்டார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் கதையின் நாயகனாக நடித்து வரும் தளபதி 68 திரைப்படத்தில் நடிகை மீனாக்ஷி சௌத்ரி கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் நடிகை மீனாக்ஷி சௌத்ரி தளபதி 68 குறித்து பகிர்ந்த ஸ்பெஷல் தகவல் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மீனாக்ஷி சௌத்ரி ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதில் அளித்து வந்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், “தளபதி 68 படம் குறித்து ஏதாவது சொல்லுங்கள்” எனக் கேட்டபோது, “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் இந்த படத்திற்காக… நண்பர்களே இந்த ப்ராஜெக்ட் ஒரு EPIC” என பதில் அளித்து இருக்கிறார். ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில் மீனாக்ஷி சௌத்ரியின் இந்த பதில் இன்னும் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது. மீனாக்ஷி சௌத்ரியின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி இதோ...

joe movie hero rio raj opens about following sivakarthikeyan

கடந்த 2021 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த "இச்சட்ட வாஹனமுலு நிலுபரடு" படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்கிய மீனாக்ஷி சௌத்ரி தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த “கொலை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அடுத்து ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடித்திருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் மீனாக்ஷி சௌத்ரி தனது 3வது தமிழ் படமாக தற்போது தளபதி விஜய் உடன் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு முதல்முறையாக விஜய் நடிக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குகிறார். தளபதி விஜய் & மீனாட்சி சௌத்ரி உடன் இணைந்து தளபதி 68 திரைப்படத்தில், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, ஜெயராம், மோகன், யோகி பாபு, அஜ்மல், விடிவி கணேஷ், வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் உடன் பிரேம்ஜி அமரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுணி தளபதி 68 திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய வெங்கட்ராஜன் படத்தொகுப்பு செய்கிறார். ராஜீவன் அவர்களின் கலை இயக்கத்தில் அதிரடி ஆக்சன் படமாக உருவாகும் இந்த தளபதி 68 திரைப்படத்திற்கு திலிப் சுப்பராயன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் தளபதி 68 திரைப்படத்தில் மதன் கார்க்கி அவர்கள் பாடலாசிரியராக பணியாற்றுகிறார். கடந்த அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்ட தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு இரண்டாவது கட்டமாக தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது. மிரட்டலான ஆக்சன் காட்சிகள் தாய்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதைத்தொடர்ந்து அடுத்த கட்டமாக தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு துருக்கியில் நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு, அவர் துருக்கியில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு தளபதி 68 என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.