அன்னபூரணி: அட்டகாசமான CHEF-ஆக விருந்து வைக்கும் நயன்தாரா & 'ராஜா ராணி'க்கு பின் மீண்டும் இணைந்த ஜெய்... செம்ம ட்ரெய்லர் இதோ!

நயன்தாராவின் அன்னபூரணி பட ட்ரெய்லர் வெளியீடு,nayanthara in annapoorani movie trailer out now | Galatta

நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது திரை பயணத்தில் 75வது திரைப்படமாக நடித்திருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ராஜா ராணி திரைப்படத்திலிருந்து பிறகு நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிகர் ஜெய் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் இந்த அன்னபூரணி திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோயிலில் அர்ச்சகராக கோவிலுக்கு தேவையான பிரசாதங்கள் சமைப்பவரின் மகளாக வரும் கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடித்திருக்கிறார். வீட்டில் இருப்பவர்கள் எம்பிஏ படிக்குமாறு கூற அவர்களின் பேச்சை மீறி மிகப் பெரிய சமையல் கலை வல்லுனராக வேண்டும் என்ற ஆசையோடு வீட்டிற்கு தெரியாமல் எம்பிஏ படிப்பதாக ஏமாற்றிவிட்டு சமையல் கலையை கற்கும் நயன்தாரா சமையல் கலையில் எவ்வளவு பெரிய வல்லுனராக வெற்றி பெறுகிறார் அதற்கு இடையில் அவர் சந்திக்கும் சோதனைகள் என்னென்ன என்பதை கதையாக இருக்கும் என்பது இந்த ட்ரெய்லரில் தெளிவாக தெரிகிறது. கலக்கலான அன்னபூரணி ட்ரெய்லர் இதோ… 

 

இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா திரை பயணத்தில் மற்றொரு மிக முக்கிய படமாக வெளிவர இருக்கிற படம் தான் அன்னபூரணி. இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் இந்த அன்னப்பூரணி திரைப்படத்தில் நடிகை ஜெய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், கார்த்திக் குமார், அச்சுத் குமார், குமாரி சச்சு, பூர்ணிமா ரவி, ரேணுகா, சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். கைதி & மாஸ்டர் படங்களின் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்யும் அன்னப்பூரணி திரைப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். 

நயன்தாராவின் திரைப் பயணத்திலேயே பிரம்மாண்டமான படைப்பாக  உருவாகி இருக்கும் அன்னப்பூரணி திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதம் 1ம் தேதி அன்னபூரணி திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நிச்சயமாக இந்த திரைப்படம் நடிகை நயன்தாராவின் திரைப்படத்தில் 75 வது திரைப்படமாக ஒரு நல்ல வெற்றி படமாக அமையும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை என சொல்லும் அளவிற்கு இதுவரை வெளி வந்திருக்கும் டீசர் ட்ரெய்லர் ஆகியவை பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கின்றன. 

அடுத்ததாக தற்போது நடிகை நயன்தாரா டெஸ்ட் எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான சசிகாந்த் அவர்கள் முதன்முறை இயக்குனராக களமிறங்கும் டெஸ்ட் திரைப் படத்தில் மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரோடு இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். மேலும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் மண்ணாங்கட்டி Since 1960 எனும் திரைப்படத்திலும் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இது போக மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இயக்குனரான இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கும் ராம் பார்ட் 2 படத்தில் நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.