"தொகுப்பாளரானால் சிவகார்த்திகேயன் மாதிரி ஹீரோ ஆகலாமா?"- ஜோ படத்தின் நாயகன் ரியோ கொடுத்த தரமான விளக்கம்! வீடியோ இதோ

தொகுப்பாளரானால் ஹீரோ ஆகலாமா ரியோ கொடுத்த தரமான விளக்கம்,joe actor rio raj about possibilities of anchor to hero sivakarthikeyan | Galatta

தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் ஃபேவரட் தொகுப்பாளர்களில் ஒருவராகவும் தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராகவும் திகழும் ரியோ ராஜ் அவர்கள் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜோ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த நடிகர் ரியோ ராஜ் நம்முடைய பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார். அந்த வகையில், “2013ல் தொடங்கப்பட்டது உங்களுடைய பயணம். தற்போது 2023 பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. எப்போதுமே ஒரு துறையில் ஒரு 10 ஆண்டுகளை  கடந்து விட்டால் அதில் இருக்கும் பாசிட்டிவ் நெகட்டிவ் எல்லாவற்றையும் பற்றிய ஒரு பகுப்பாய்வு தெரிந்து கொள்ள முடியும்... இந்த பத்து வருடத்தில் உங்களுடைய வாழ்க்கை எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது பொருளாதார அடிப்படையிலும், உங்களது துறையிலும் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்..? எனக் கேட்ட போது, 

“அப்போது கார் இல்லை இப்போது கார் இருக்கிறது. அப்போது பேச்சுலர் ரூமில் இருக்கும்போது படுத்த பாயை கூட மடித்து வைக்க மாட்டோம் சுற்றி ஒரு பத்து பேர் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள். இப்போது கல்யாணம் ஆகிவிட்டது குழந்தை இருக்கிறது இப்போதும் படுத்த பாயை மடித்து வைப்பதில்லை. மற்றபடி பெரிதாக எந்த மாற்றத்தையும் பார்க்கவில்லை. அப்போது பைக்குக்கு மாதத் தவணை கட்டிக் கொண்டிருந்தேன். இப்போது காருக்கு மாதத் தவனை கட்டுகிறேன். அப்போது பேச்சுலர் ரூமுக்கு ஆனா வாடகை கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது குடும்பத்திற்கான வீட்டு வாடகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். இப்போதும் பசங்க எல்லாரும் வீட்டிற்கு வந்து விடுவார்கள். எனக்கு பெரிதாக எதுவும் மாற்றம் இருப்பதாக தெரியவில்லை. அதேதான் ஒருவேளை மெச்சூரிட்டி அடிப்படையில் பார்க்கும்போது எதை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் சில மாற்றங்கள் இருக்கிறது. அது தவிர பொருளாதார அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட முறையிலோ பெரிய மாற்றங்கள் எதையும் நான் பார்க்கவில்லை. கரியரில் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன.” என்றார். 

தொடர்ந்து அவரிடம், “இப்போது இருக்கக்கூடிய தலைமுறையில் ஒரு நூறு தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களிடம் அடுத்து நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களில் 70 - 80 சதவீதம் பேர் சிவகார்த்திகேயன் மாதிரி ஹீரோ ஆகப்போகிறேன் என்று தான் சொல்வார்கள்... நீங்களும் ஒரு தொகுப்பாளராக இருந்தீர்கள் இப்போது ஹீரோவாக இருக்கிறீர்கள்... அது எவ்வளவு கஷ்டம் தொகுப்பாளராக இருந்தால் ஹீரோ ஆகிவிட முடியுமா?” என்று கேட்டபோது, “முதலில் இதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் ஹீரோ ஆக வேண்டும் என்றால் தொகுப்பாளராகி ஹீரோ ஆக வேண்டும் என்று இல்லை. அது வேறு இது வேறு. தொகுப்பாளராக வேண்டுமென்றால் தொகுப்பாளராக வேண்டும் என்பது மட்டும்தான் கோல் ஆக இருக்க வேண்டும். எனக்கு அவ்வளவு தான் கோல் ஆக இருந்தது. அதனால்தான் நான் செய்த நிகழ்ச்சிகள் எல்லாம் நல்லபடியாக செய்ய முடிந்தது. இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இது வேறு துறை அது வேறு துறை. இது எப்படி இருக்கிறது என்றால் ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேண்டும் என்றால் செக்யூரிட்டியாக வேலைக்கு சேர்ந்தால் போதும் என்பது போல் இருக்கிறது.” என்றார். அந்த முழு பேட்டி இதோ...