"நீங்க ஒரு ஹீரோ மெட்டீரியல் தான் பிரதர்!"- ஜோ பட நாயகன் ரியோ ராஜுக்கு நம்பிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்! ட்ரெண்டிங் வீடியோ

ஜோ பட நாயகன் ரியோ ராஜுக்கு நம்பிக்கை கொடுத்த சிவகார்த்திகேயன்,rio raj about sivakarthikeyan gave hope to become hero in cinema | Galatta

நடிகர் ரியோ ராஜ் நாயகனாக நடித்திருக்கும் ஜோ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளர்களில் ஒருவராக கலக்கிய ரியோ ராஜ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் அசத்தி வருகிறார். தற்போது கதாநாயகனாக வலம் வரும் ரியோ ராஜுக்கு தமிழ் சினிமாவில் கதாநாயகனாகும் நம்பிக்கையை முதல் முதலில் கொடுத்த முக்கிய நபர் சிவகார்த்திகேயன். முன்னதாக தனது சொந்த தயாரிப்பில், நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா திரைப்படத்தில் நடிகர் ரியோவை கதாநாயகனாகவும் சிவகார்த்திகேயன் நடிக்க வைத்திருக்கிறார். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுத்த நடிகர் ரியோ ராஜ் நம்முடைய பல கேள்விகளுக்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார். அந்த வகையில், “உங்களை யாராவது முதல் முதலில் சொல்லி இருப்பார்கள் அல்லவா நீங்கள் ஹீரோ ஆக வேண்டும் என்று... நீங்கள் ஒரு ஹீரோ மெட்டீரியல் என்று... அப்படி உங்களுக்கு முதன் முதலில் சொல்லியவர் யார்?" என கேட்டபோது, "சிவகார்த்திகேயன் அண்ணா... நேர்மையாக முதலில் சொல்லியது அவர்தான் என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை தாண்டி ஒருவர் சொன்னார் என்றால் அது அவர்தான். ஒரு நாள் போன் செய்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் எப்போதும் என்னுடைய நிகழ்ச்சியில் இதெல்லாம் பிடித்தது பிடிக்கவில்லை என்பது பற்றி எல்லாம் சொல்லுவார். ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். “அடுத்து என்னெல்லாம் பண்ணப் போகிறீர்கள்” என அவர் பேசியபோது அவர் நிறைய அறிவுரைகள் கொடுத்தார். இதை நான் பல இடங்களில் சொல்லி இருக்கிறேன். “இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் இதே பண்ணுங்கள் என நிறைய பேர் நிறைய ஐடியாக்கள் கொடுப்பார்கள் அதையெல்லாம் எதையும் கேட்காதீர்கள் உங்களுக்கு என்று ஒன்று தோன்றும் அல்லவா அதை மட்டும் செய்யுங்கள். இந்த நிகழ்ச்சியை இப்படி பண்ண வேண்டும் என உங்களுக்கு தோன்றியது. அதை செய்ததும் எல்லோருக்கும் பிடித்ததல்லவா அது மாதிரி இனிமேல் நீங்கள் செய்வதெல்லாம் மற்றவர்களுக்கு பிடிக்கும். எனவே மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எதுவும் பண்ணாதீர்கள். உங்களுக்கு மனசார ஒன்று தோன்றும் அல்லவா அதை எல்லாம் செய்யுங்கள் எல்லாமே வெற்றியடையும்” என சொல்லிவிட்டு இதை சொன்னார். “கதை எல்லாம் கேட்கிறீர்களா படம் எல்லாம் வருகிறதா?” என்றார். “என்ன அண்ணே இதெல்லாம் கேட்கிறீர்கள் கதையெல்லாம் கேட்கிறீர்களா என்கிறீர்கள்” என்றேன். “நான் ஒன்றும் ஹீரோ இல்லையே நான் ஏதோ நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன்” என்றேன். “இல்லையே இந்நேரம் உங்களுக்கு கதை எல்லாம் வர ஆரம்பித்திருக்குமே?” எனக் கேட்டுவிட்டு, “நீங்கள் ஒரு ஹீரோ மெட்டீரியல் தான் பிரதர் உங்களுக்கு வரும் பாருங்கள்” என சொன்னார். அதன் பிறகு கரியர் சார்ந்து சில அறிவுரைகள் கொடுத்தார். ஆனால் முதல் முறை பேசியபோது அவர் இதை சொன்னார். “உங்களுக்கு இன்னும் கதை வரவில்லையா நீங்கள் இன்னும் கதை கேட்கவில்லையா” என்று சொன்னார்.” என பதில் அளித்தார். ரியோ ராஜின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்க்கை காணலாம்.