"இத சொல்லிக் கொடுத்ததும் சிவா அண்ணா தான்!"- சிவகார்த்திகேயனை பின்தொடர்வது பற்றி மனம் திறந்த ரியோ ராஜ்! வைரல் வீடியோ

நடிகர் சிவகார்த்திகேயனை பின் தொடர்வது பற்றி மனம் திறந்த ரியோ ராஜ்,rio raj opens about following sivakarthikeyan | Galatta

சின்னத்திரையின் வாயிலாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் மனதிலும் இடம் பிடித்த மிக முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவரான ரியோ ராஜ் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக தனது வெற்றிப் படிகளில் அடியெடுத்து வைக்கத் தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் தற்போது ரியோ ராஜ் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ஜோ. இயக்குனர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ நடித்திருக்கும் கல்லூரியை மையப்படுத்திய காதல் படமான ஜோ திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்த ரியோ ராஜ் தனது திரைப்பயணம் குறித்து பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், 

“நீங்கள் நிச்சயமாக இந்த கேள்வியை தாண்டி தான் வந்திருப்பீர்கள். நீங்கள் என்ன சிவகார்த்திகேயனை பின் தொடர்கிறீர்களா?” எனக் கேட்டதும், “ஆமாம்” என உடனடியாக பதிலளித்தார். தொடர்ந்து அவரிடம், “இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள். கரியர் அடிப்படையில் நீங்கள் அவரை பின்தொடர்கிறீர்கள் என்றால் எந்த தவறும் இல்லை ஆனால் மாறாக இப்போது உதாரணத்திற்கு விஜய் சார் என்ன செய்தாலும் அவர் ரஜினி சாரை பின் தொடர்கிறார் என சொல்வது போல நீங்கள் என்ன செய்தாலும் இவர் சிவகார்த்திகேயனை பின் தொடர்கிறார் அவரைப் போலவே பேசுகிறார் பதில் கொடுப்பதாக இருக்கட்டும் மேடையில் பேசுவதாக இருக்கட்டும் இவர் அப்படியே சிவகார்த்திகேயனை பார்த்து பின் தொடர்கிறாரோ! என கேட்கிறார்கள்… உங்களுடைய பதில் என்ன?” என கேட்டபோது, 

“கிடையவே கிடையாது. நான் பேசியதெல்லாம் கொஞ்சம் எடுத்து பாருங்கள் அந்த மாதிரி சிவா அண்ணா எங்கேயுமே பேசி இருக்க மாட்டார். சிவா அண்ணா மிகவும் பொறுப்பாக அதுவும் மேடையில் ஒரு மைக்கை பிடிக்கும் போது மிகவும் பொறுப்பாகவும் பேசுற வார்த்தைகளில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக இருப்பார். எனக்கு அதெல்லாம் கிடையாது நான் தோன்றியதை பேசி விடுவேன். அதன்பிறகு நான் அதற்காக திட்டு எல்லாம் வாங்கி இருக்கிறேன். அவரைப் பின் தொடர்கிறேன் என்றால் அவரைப்போலவே அர்ப்பணிப்போடு இருக்க வேண்டும். சரியான பாதையில் செல்ல வேண்டும். அதெல்லாம் அவரைப் பார்த்து நான் பின் தொடர்கிறேன் தான். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் அவரை மாதிரியே எல்லாம் பண்ண வேண்டும் என்று எனக்கு எந்த நேரத்திலும் தோன்றியதே இல்லை... இன்னொரு விஷயம் அப்படி செய்வதனால் எல்லாமே சரியாக இருக்காது என்று எனக்கு தெரியும். ஒருவர் ஒரு இடத்தை பிடித்த பிறகு அதேபோல நாம் செய்தால் அந்த இடத்தை பிடித்து விடலாம் என நினைப்பதே என்னைப் பொறுத்த வரைக்கும் தவறு... நாம் நமக்கான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் மேலே போக வேண்டும் என்றால் நமக்கு என்ன வருமோ அதை தான் செய்ய வேண்டும். இதை எனக்கு சொல்லிக் கொடுத்ததும் சிவா அண்ணா தான்.” என பதில் அளித்திருக்கிறார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட ரியோ ராஜின் அந்த முழு பேட்டி இதோ...