மீண்டும் ரீ ரிலீஸான ‘வாரணம் ஆயிரம்’.. திரையரங்குகளில் மாஸ் காட்டும் சூர்யா ரசிகர்கள்.. விவரம் உள்ளே..

திரையரங்குகளில் மீண்டும் ரிலீஸ் ஆன சூர்யாவின் வாரணம் ஆயிரம் விவரம் உள்ளே - Suriya blockbuster hit vaaranam aayiram re release in telugu | Galatta

தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தொடர்ந்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வரும் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். வித்யாசமான கதைகளத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் தனி எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 10 மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை அதிகரித்துள்ளது.

கங்குவா படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் ‘வாடிவாசல்’ படத்திலும் இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சூர்யாவிற்கு நாளுக்கு நாள் இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் ரீ ரிலீஸ் செய்துள்ளது படக்குழு.. இதனை ரசிகர்கள் வெகு விமர்சியாக கொண்டாடி வருகின்றனர்.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் இயக்கத்தில் சூர்யா (இரு வேடங்களில்). சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் ஆகியோர் நடிப்பில் அப்பா மகன் வாழ்வியலை காதலுடன் பேசி உருவான இப்படம் தமிழ் ரசிகர்களால் மிகப்பெரிய அளவு கொண்டாடப்பட்டது. இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக ஹாரிஸ் ஜெயராஜ் இசை இருந்தது.

ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்றும் சூர்யாவின் திரைப்பயணத்தில் சிறந்த படங்களின் ஒன்றாக இப்படம் இருந்து வருகிறது. இப்படத்திற்காக சிறந்த தமிழ் படம் என்ற பட்டியலில் தேசிய விருதினை இப்படம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்த 15 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் வாரணம் ஆயிரம் திரைப்படம் தெலுங்கில் ‘சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்’ என்ற பெயரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வாரணம் ஆயிரம் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி ரசிகர்களாலும் கொண்டாடபட்ட திரைப்படம் என்பத குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலங்களில் பல இடங்களில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு ஆதரவு அளித்து கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து இந்த ரீ ரிலீஸை வெற்றி பெற வைத்தனர். மேலும் படத்தில் இடம் பெற்றுள்ள அஞ்சலை பாடலுக்கு ரசிகர்கள் திரையரங்குகளில் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Never before ever after craze for a dubbed film re-release in AP/TS.#SuryaSonOfKrishnan opened to tremendous response with house full shows. pic.twitter.com/nbYdesjzLe#Suriya is indeed an adopted son of Telugu states.

— Manobala Vijayabalan (@ManobalaV) August 4, 2023

~ OK GOOGLE. Define RAMPAGE..

GOOGLE ~
Did you mean #SuryaSonOfKrishnan Re-release..?! pic.twitter.com/8T92JxuTeZ

— 𝕁𝕒𝕚𝕝𝕖𝕣 𝘽𝙇𝘼𝘾𝙆𝙔 ᵀᴹ (@BlackyDaa) August 4, 2023

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..
சினிமா

“நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன்..” திருமணமான ஒரே ஆண்டில் இறந்த கணவர் குறித்து நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா உருக்கமான பதிவு..

 “மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்..” மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ பட நடிகை ரவீனா நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே.
சினிமா

“மீம்களையும், வீடியோ எடிட்களையும் கண்டு ரசித்தேன்..” மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ பட நடிகை ரவீனா நெகிழ்ச்சி.. வைரல் பதிவு உள்ளே.

 “எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..
சினிமா

“எங்க அண்ணன் ரஜினிகாந்த் தான் சூப்பர் ஸ்டார்..” அதிரடியாக பதிலளித்த நடிகர் பிரபு.! – வைரல் வீடியோ உள்ளே..