‘துண்ட காணோம் துணிய காணோம்னு ஓட விட்ருவேன்’- திரிஷா சர்ச்சை குறித்து 'நடிகர் சங்கத்திற்கு 4மணி நேரம் கெடு' வைத்த மன்சூர் அலிகான்! வைரல் வீடியோ

திரிஷா சர்ச்சை நடிகர் சங்கத்திற்கு 4மணி நேரம் கெடு வைத்த மன்சூர் அலிகான்,mansoor ali khan slams nadigar sangam on trisha controversy | Galatta

கடந்த ஓரிரு தினங்களாக நடிகை திரிஷா குறித்தும் கதாநாயகிகள் குறித்தும் நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், நடிகர் சங்கம் சார்பிலும் தேசிய மகளிர் ஆணையம் சார்பிலும் அவர் மீது வன்மையான கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் வெளியிடப்பட்டன. இதில் நடிகர் சங்கம், மன்சூர் அலிகான் அனைவரது முன்பும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் இது குறித்து மிகவும் ஆவேசமாக தனது கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார். அந்த பேட்டியில்,

“நடிகர் சங்கம் மிகப்பெரிய இமாலய தவறு செய்திருக்கிறது. நான் வேண்டாம் என அமைதி காத்துக் கொண்டிருக்கிறேன் எரிமலையாக குமுறினேன் என்றால் எல்லோரையும் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓட விட்டுடுவேன். இங்கிருந்து அடுத்த எங்கே போவீர்கள் என்று எனக்கு தெரியும். நடிகர் சங்கத்திற்கு இப்போது இருந்து நான்கு மணி நேரம் கெடு வைக்கிறேன். இந்த மன்சூர் அலி கானை பலிகடா ஆக்கிவிட்டு கருப்பு ஆடு ஆக்கிவிட்டு நீங்கள் நல்ல பெயர் எடுக்கிறீர்களா? இது என்ன நியாயம். நடிகர் சங்கம்… ஒரு சங்கம் என்று இருந்தால் குறைந்தபட்ச நியாயம்... உங்கள் எல்லோருக்கும் ஒரு அமைப்பு இருக்கிறது. “ஏன்ப்பா என்ன இப்படி ஒன்று வந்திருக்கிறது இவர் என்ன இப்படி பேசி இருக்கிறார்?” என்று கேட்க வேண்டாமா? நான் பதில் சொல்லி இருப்பேன் இல்லையா? நீங்களே தீர்ப்பு சொல்லி நீங்களே அறிக்கை வெளியிடுகிறீர்கள். மக்களுக்கு நான் யார் என்ன என்று தெரியும். 4 - 5 கோடிகள் போட்டு ஒரு படம் எடுத்து நான் ரிலீஸ் பண்ண போகிறேன் அந்த நேரத்தில் படமும் வெளியாகாத மாதிரி, பலரும் நடிகர் சங்கத்தின் தீர்ப்புக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் கட்டுப்படுகிறோம் என்கிறார்கள். திரிஷா, "அவருடன் நடிப்பதை நான் வெறுக்கிறேன் ஸ்கிரீன் ஷேர் செய்வதை நான் வாழ்க்கையில் செய்ய மாட்டேன்" என சொல்லிவிட்டு, பக்கத்து பக்கத்துல பொண்ணு மாப்பிள்ளை மாதிரி எல்லா பேப்பரிலும் போட்டோ வந்திருக்கிறது. நான் நன்றாக இருப்பது மாதிரி ஒரு நல்ல போட்டோ போட்டிருக்க கூடாதா? ஆனால் ஒரு சில இடங்களில் நான் அந்த அம்மாவை விட நன்றாகவே இருக்கிறேன். அதையும் பார்த்தேன் எல்லா மொழிகளிலும் இங்கிலீஷ்... ஹாலிவுட் வரைக்கு போயிருச்சுப்பா..! அந்த விதத்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான். ஆனால் நடிகர் சங்கம் செய்தது இமாலய தவறு. ஒரு விசாரணை நடத்திய பிறகு தான் சொல்ல வேண்டும். சினிமாவில் பலாத்கார காட்சி என்பது நிஜத்திலும் பலாத்காரம் செய்வதா என்ன? சினிமாவில் ஒருவர் கொலை பண்ணுகிறார் என்றால், இப்போது அவை எல்லாவற்றையும் ஹீரோக்களே செய்து விடுகிறார்கள். விக்ரம் படத்தில் கமல் சார் பண்ணினார். அதெல்லாம் நான் நன்றே சொன்னேன் அதை எல்லாம் இருட்டடிப்பு செய்துவிட்டு, சூர்யா பண்ணுகிறார் “ஆஹா நன்றாக பண்ணுகிறார்.” என கைதட்டுகிறார்கள். நிஜமாகவா அவர் கொலை பண்ணுகிறார் அங்கே... சினிமாவில் பலாத்கார காட்சி என்பது நிஜமாகவே பலாத்காரம் செய்வதா முட்டாள்களே... சங்கங்களுக்கு அறிவு வேண்டாமா... குறைந்தபட்ச அறிவு வேண்டாமா நடிகை மீரா ஜாஸ்மின் படத்தில் அறிமுகமானார் அப்போது அவரை தூக்கி ஒரு கட்டில் போட்டேன் “அய்யய்யோ அடிபட்டுவிட்டதே” என்று உடனே அசிஸ்டன்ட்டை கூப்பிட்டு அந்த துணி விலகி இருக்கிறது என்று துணியை மூடிவிட்டு “அம்மா மன்னிச்சுக்கோ” என கேட்டுவிட்டு, “அந்த ஸ்ப்ரே இருந்தால் அவர்களுக்கு அடித்து விடுங்கள்.” என இப்படி தான் நடக்கும். இதை நான் உங்களுடைய யோசனைக்கு விட்டு விடுகிறேன். எனக்கு தமிழ்நாடே உடன் இருக்கிறது. இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படுபவன் நான் அல்ல.”  

என தெரிவித்துள்ளார். நடிகர் மன்சூர் அலிகான் அந்த பேட்டி இதோ…