கேப்டன் மில்லர்: தனுஷின் மிரட்டலான அவதாரத்தில் வரும் பீரியட் ஆக்சன் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிரடியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்து அறிவிப்பு,dhanush in captain miller movie first single release announcement | Galatta

இதுவரை நடிகர் தனுஷின் திரைப் பயணத்திலேயே இல்லாத அளவிற்கு மிரட்டலான அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளிவர இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலாக வரும் “கில்லர் கில்லர்” என்ற இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியிருக்கிறார். கேபர் வாசுகி இந்த கில்லர் கில்லர் பாடலை எழுதியிருக்கிறார். ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் முதல் பாடலான “கில்லர் கில்லர்” பாடல் வருகிற புதன்கிழமை நவம்பர் 20ஆம் தேதி மாலை வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது . அதிரடியான அந்த அறிவிப்பு இதோ…

 

Get ready folks ! @gvprakash x @dhanushkraja all set to drop a Banger 🔥

First single Killer Killer from #CaptainMiller ,Releasing on November 22nd (Wednesday) 🥁

Lyrics @kabervasuki @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @saregamasouth pic.twitter.com/FnTb39TxVH

— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 20, 2023

இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக உலக அளவில் தன் நடிப்பால் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிப்பின் அசுரன் தனுஷ் அடுத்தடுத்து நடிக்கும் ஒவ்வொரு படங்களும் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. அதிலும் கேப்டன் மில்லர் திரைப்படம் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராக்கி மற்றும் சாணிக் காயிதம் என தனக்கென தனி பாணியில் மிரட்டலான ஆக்சன் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 1930 -களில் நடைபெறும் கதைக் களத்தை கொண்ட பக்கா அதிரடி பீரியட் ஆக்சன் திரைப்படமாக  தனுஷ் நடித்துள்ள அதிரடியான படம் தான் கேப்டன் மில்லர். தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். மேலும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல், பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் சொன்னேன்பிலிக் ஆகியோர் கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பு செய்யும் கேப்டன் மில்லர் திரைப் படத்திற்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதனிடையே ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் விரைவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. சமீபகாலமாக முன்னணி நட்சத்திர நாயகர்களின் இசை வெளியீட்டு விழாக்கள் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக வருகிற டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைப்படம் உலகம் எங்கும் திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக அறிவித்தப் படக்குழு, வருகிற 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக கேப்டன் மில்லர் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். அதே பொங்கல் வெளியீடாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மிக முக்கிய கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் லால் சலாம் சிவகார்த்திகேயனின் அயலான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஹிந்தி படமான மெர்ரி கிறிஸ்மஸ் உள்ளிட்ட படங்களும் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.