"கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தற்போதைய உடல்நிலை எப்படி உள்ளது?"- தேமுதிக தலைமை கழகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!

கேப்டன் விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கை வெளியீடு ,captain vijayakanth current health status official statement from dmdk | Galatta

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை குறித்த தற்போதைய என்ன? என காத்திருந்த அவரது தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தி கொடுக்கும் வகையில் தேமுதிக தலைமை கழகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு தீவிரமான சுவாச பிரச்சனை ஏற்பட்டிருப்பதாகவும் அதற்காக செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வரவே அவரது கட்சி தொண்டர்களும் ரசிகர்களும் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தேவையற்ற வசதிகளை நம்ப வேண்டாம் என தெரிவித்து தலைமை கழகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. 

அந்த அறிவிப்பில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அவர்கள் ஓரிரு நாளில் வீடு திரும்புவார். செயற்கை சுவாசம் கொடுக்கப்படுவதாக தவறான செய்திகளை வெளியிடும் தொலைக்காட்சிகளை பார்த்து யாரும் நம்பவேண்டாம். இது முற்றிலும் தவறான செய்திகள். இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவும் வேண்டாம், யாரும் பரப்பவும் வேண்டாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

pic.twitter.com/LTfUGXfUr8

— Vijayakant (@iVijayakant) November 20, 2023

கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த சனிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டனர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சுவாசம் சுவாச பிரச்சனை இருப்பதால் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதை அடுத்து அனைவருக்கும் விளக்கம் அளிக்கும் வகையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டு சர்ச்சைகளுக்கு. வைக்கப்பட்டது. உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காகவே சென்றிருப்பதாகவும் தேவையற்ற பதவிகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வந்த அந்த அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். ஓரிரு நாளில் வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்.”  என தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேற்றும் இன்றும் தொடர்ந்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து வதந்தியாக பல்வேறு விஷயங்கள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவி வந்த நிலையில் தலைமை கழகத்திலிருந்து தற்போது அதிகாரப்பூர்வமாக கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. வழக்கமான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் விஜயகாந்த் அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை அல்லது ஓரிரு தினங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.