தென்னிந்திய சினிமாவில் முதல் படமாக பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு கூடும் பிரம்மாண்டம்!- அட்டகாசமான அறிவிப்பு இதோ

பொன்னியின் செல்வன் 2 படம் 4DX தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகிறது,mani ratnam in ponniyin selvan 2 movie releasing in 4dx cinemas | Galatta

இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாகவும் சிறந்த இயக்குனராகவும் திகழும் இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் தனது கனவு படைப்பாக செதுக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். புகழ்மிக்க எழுத்தாளர் கல்கி அவர்களின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை உருவாக்க தமிழ் சினிமாவில் எத்தனையோ ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியாத சமயத்தில் பலமுறை முயற்சி செய்த இயக்குனர் மணிரத்னம் விடாமுயற்சியின் பலனாக தனது கடின உழைப்பில் பொன்னியின் செல்வனை திரை வடிவமாக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் பாகம் 1 ரசிகர்களுடைய ஏகோபித்த வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது.

ஆதித்த கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கிற அருள் மொழி வர்மன், வல்லவரையன் வந்தியத்தேவன், நந்தினி & ஊமைராணி, குந்தவை, ஆழ்வார்கடியான் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டறையர், சிறிய பழுவேட்டறையர், சுந்தர சோழர், பார்த்திபேந்திர பல்லவன், பெரிய வேளாளர் பூதி விக்ரம கேஸரி, வானதி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், ரவிதாசன், திருக்கோவிலூர் மலையமான், செம்பியன் மாதேவி, அனிருத்த பிரம்மராயர், வீரபாண்டியன் உள்ளிட்ட பொன்னியின் செல்வனின் மிக முக்கிய கதாபாத்திரங்களில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, இரட்டை வேடத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, ஷோபிதா, ரஹ்மான், அஸ்வின் கக்கமன்னு, கிஷோர், லால், ஜெயசித்ரா, மோகன் ராமன், நாசர் ஆகியோர் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இயக்குனர் மணிரத்னம் உடன் இணைந்து பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல் ஆகியோர் இணைந்து திரைக்கதை வசனத்தில் பணியாற்றியுள்ளனர். தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மனின் அற்புதமான ஒலிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாத் படத்தொகுப்பு செய்த பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் இன்னும் பலம் கூட்டினார். பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கினறனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட இந்த 2023 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வருகிற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படம் உலகெங்கும் பல்வேறு மொழிகளில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக பொன்னியின் செல்வன் டு திரைப்படம் 4DX தொழில்நுட்பத்தில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#PS2 will be the 1st South Indian Movie to release in #4DX 🤩 Watch it in your nearest #4DXCinemas 📽️ to have a wholesome experience of the world of #PonniyinSelvan ⚔️#PS2 in cinemas worldwide from 28th April in Tamil, Hindi, Telugu, Malayalam, and Kannada!#CholasAreBackpic.twitter.com/I3NwsD4SGH

— Lyca Productions (@LycaProductions) April 11, 2023

அப்பாவை இழந்த சூழ்நிலையிலும் தன் திரைப்பயணத்திற்கு உறுதுணையாக நின்ற அம்மா... மனம் திறந்த விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் பேட்டி இதோ!
சினிமா

அப்பாவை இழந்த சூழ்நிலையிலும் தன் திரைப்பயணத்திற்கு உறுதுணையாக நின்ற அம்மா... மனம் திறந்த விக்னேஷ் சிவனின் ஸ்பெஷல் பேட்டி இதோ!

பள்ளி - கல்லூரியிலிருந்து சினிமாவில் வர பெரிய திருப்புமுனை இதுதான்... முதல் முறை ரகசியம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடிய
சினிமா

பள்ளி - கல்லூரியிலிருந்து சினிமாவில் வர பெரிய திருப்புமுனை இதுதான்... முதல் முறை ரகசியம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடிய

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ
சினிமா

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ