மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தானத்தின் சூப்பர் ஹிட் பட ஹீரோயின்!- வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

நடிகை விஷாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,actress vishakha singh admitted in hospital for treatment | Galatta

இந்திய சினிமாவின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை விஷாகா சிங் தற்போது திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ஞாபகம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் விஷாகா சிங். இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு நடிகர் அசோக் குமார் கதாநாயகனாக நடிக்க வெளிவந்த பிடிச்சிருக்கு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் நடிகை விஷாகாஷின் களமிறங்கினார். தொடர்ந்து ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் பல திரைப்படங்களில் விஷாகா சிங் நடித்துள்ளார். 

குறிப்பாக நடிகர் சந்தானம், சேது மற்றும் பவர் ஸ்டார் ஆகியோர் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் விசாகா சிங் கதாநாயகியாக நடித்திருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடிகர் விமல் மற்றும் சூரி இணைந்து நடித்த இரண்டு ராஜா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த நடிகை விஷாகா சிங், கண்ணா லட்டு தின்ன ஆசையா வெற்றி கூட்டணியான சந்தானம் - சேது - பவர்ஸ்டார் கூட்டணி மீண்டும் இணைந்த வாலிப ராஜா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக ஹிந்தியில் தி மாயா டேப் என்ற திரைப்படத்திலும், தூரம் எனும் தெலுங்கு திரைப்படத்திலும் விஷாகா ஷிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். முன்னதாக தனது சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை விஷாகா சிங்கை Instagramல் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்களை தற்போது விஷாகா சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிறுநீரகத்தில் சிறிய தொந்தரவு காரணமாக நடிகை விஷாகா சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவர் பூரண குணமடைந்து மீண்டு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பரவிய விஷாகா சிங்கின் மருத்துவமனை புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிகிச்சை நல்ல முறையில் நிறைவடைந்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகை விஷாகா சிங் மிக விரைவில் பூரண குணமடைந்து மீண்டு வர வேண்டும் என கலாட்டா குழுமம் வேண்டிக்கொள்கிறது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நடிகை விஷாகா சிங்கின் அந்த மருத்துவமனை புகைப்படங்களை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

 

View this post on Instagram

A post shared by Vishakha Jitendra Singh (@vishakhasingh555)

பள்ளி - கல்லூரியிலிருந்து சினிமாவில் வர பெரிய திருப்புமுனை இதுதான்... முதல் முறை ரகசியம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடிய
சினிமா

பள்ளி - கல்லூரியிலிருந்து சினிமாவில் வர பெரிய திருப்புமுனை இதுதான்... முதல் முறை ரகசியம் பகிர்ந்த விக்னேஷ் சிவன்! ட்ரெண்டிங் வீடிய

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ
சினிமா

கேம் சேஞ்சர்ஸ்: முதல் முறை மனம் திறக்கும் விக்னேஷ் சிவன்... சுஹாசினி மணிரத்னம் உடன் அட்டகாசமான சிறப்பு நேர்காணல்! விவரம் இதோ

தல தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் LGM ஃபர்ஸ்ட் லுக் இதோ!
சினிமா

தல தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்... கவனம் ஈர்க்கும் ஹரிஷ் கல்யாணின் LGM ஃபர்ஸ்ட் லுக் இதோ!