மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் மம்முட்டி.தனது வித்தியாசமான படங்களாலும்,விடாமுயற்சியாலும் மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார் மம்முட்டி.இன்றும் படங்களில் நடித்து ரசிகர்களை எண்டெர்டைன் செய்து வருகிறார்.

அடுத்ததாக Mammootty Kampany மற்றும் Wayfarer Films இணைந்து தயாரிக்கும் காதல் - தி கோர் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.இந்த படத்தினை மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன The Great Indian Kitchen படத்தினை இயக்கிய Jeo Baby இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இவர் முதல் முறையாக மம்மூட்டியுடன் ஜோடி சேருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஒரு பூஜையுடன் தொடங்கியுள்ளது.இந்த பூஜையில் முக்கிய நடிகர் நடிகைகள் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகின்றன.