மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் 51வது படம்... மலேசியாவில் நடைபெறும் படப்பிடிப்பு குறித்த ஸ்பெஷல் அப்டேட் இதோ!

விஜய் சேதுபதியின் 51 வது பட முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு,makkal selvan vijay sethupathi 51st movie first schedule wrapped in malaysia | Galatta

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் தொலை பயணத்தில் 51 வது திரைப்படமாக தயாராகி வரும் விஜய் சேதுபதி 51 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்த அதிரடி அறிவிப்பு தற்போது வெளியானது. கூட்டத்தில் ஒருவனாக தனது திரை பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் இன்றியமையாத நடிகராகவும் இந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகராகவும் உயர்ந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், நீண்ட நாட்களாக ரிலீஸுக்காக காத்திருந்த யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமாக இயக்கிய மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தமிழில் முனீஸ்காந்த் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த மும்பைக்கர் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நேரடியாக ஜியோ சினிமா தளத்தில் ரிலீஸ் ஆனது. 

முன்னதாக ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்களான ராஜ் மற்றும் டி கே ஆகியோருடன் இணைந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த ஃபர்ஸி என்ற ஹிந்தி வெப் சீரிஸ் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் அடுத்ததாக  தனது முதல் தமிழ் வெப் சீரிஸாக காக்கா முட்டை ஆண்டவன் கட்டளை கடைசி விவசாயி படங்களின் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய வெப் சீரிஸில் தற்போது நடித்து வருகிறார். தொடர்ந்து ஏஜென்ட் வினோத், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகும் மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி திரைப்படத்தில் கத்ரீனா கைஃப் உடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதி, இயக்குனர் அட்லி முதல் முறை பாலிவுட்டில் இயக்குனராக களமிறங்க ஷாரூக் கான் கதாநாயகனாக நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். மேலும் காந்தி டாக்ஸ் எனும் மௌனப் படத்திலும், விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் கடந்த 2018ல் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குனர் ஆறுமுக குமாருடன் மீண்டும் இணைந்து இருக்கும் திரைப்படம் தான் விஜய் சேதுபதி 51. தனது திரைப் பயணத்தில் 51 வது திரைப்படமாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு மற்றும் ருக்மணி வசந்த் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கடைசி விவசாயி திரைப்படத்தை வெளியிட்ட 7Cs என்டர்டைன்மென்ட் நிறுவனம் தனது 5வது தயாரிப்பாக இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார். இத்திரைப்படத்தின் படப் பூஜை கடந்த மாதம் (மே 19) மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்று வந்த இத்திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதற்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் இணைந்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளனர். அந்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…
 

Delighted to announce that we have officially wrapped up the 1st schedule of our film, in malaysia #MakkalSelvan @VijaySethuOffl in the lead. Happy with the way the film has shaped up. Exciting updates on the way! Thank u for ur love & support #VJS51@rukminitweets @iYogiBabu pic.twitter.com/RMAvHDFs1h

— 7Cs Entertaintment (@7CsPvtPte) June 12, 2023

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!
சினிமா

தமிழ்நாடு முழுவதும் நடப்பாண்டில் 1.1கோடி மரக்கன்றுகள் நட இலக்கு... ஈஷாவின் காவேரி குக்கரல் இயக்கத்தின் மெகா திட்டம்!

யோகி பாபு - முனீஸ்காந்தின் கலக்கல் காமெடி... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!
சினிமா

யோகி பாபு - முனீஸ்காந்தின் கலக்கல் காமெடி... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

சினிமா

"RIGHT IS BACK!"- சுந்தர்Cயின் பக்கா ஆக்சனில் வரும் தலைநகரம் 2 பட மிரட்டலான ட்ரெயலர் இதோ!