சூப்பர் ஹீரோவாக அசத்தும் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன்... அதிரடி சண்டைகாட்சியின் ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட புது மேக்கிங் வீடியோ,Hiphop tamizha adhi in veeran movie making video of action scenes | Galatta

அனைத்து வயது ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ள சூப்பர் ஹீரோவாக அசத்திருக்கும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் வீரன் திரைப்படத்தின் அதிரடியான சண்டைக் காட்சியின் மேக்கிங் வீடியோ வெளியானது. சுயாதீன இசை கலைஞராக தனது பயணத்தை தொடங்கி தற்போது தமிழ் சினிமாவின் மிக முக்கிய இசையமைப்பாளர் நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் ஹிப் ஹாப் தமிழா ஆதி அடுத்ததாக விளையாட்டு ஆசிரியர் கதாபாத்திரத்தில் தற்போது PT Sir எனும் படத்தில் நடித்து வருகிறார். வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் PT Sir திரைப்படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார். PT Sir திரைப்படத்தின் படப்பிடிப்பு கோயமுத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடிகர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் நடிப்பில் வித்தியாசமான சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் படம் தான் வீரன். மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த இயக்குனர் ARK.சரவண் எழுதி இயக்கியுள்ள வீரன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து வினய், ஆதிரா ராஜ், முனீஸ் காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் உள்ளிட்ட பலர் வீரன் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக் D மேனன் ஒளிப்பதிவில் பிரசன்னா.GK படத்தொகுப்பு செய்ய, வீரன் திரைப்படத்திற்கு மகேஷ் மேத்யூ ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

முன்னதாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற மின்னல் முரளி திரைப்படத்தின்  சாயல் வீரன் திரைப்படத்தில் இருப்பதாக பலதரப்பட்ட விமர்சனங்கள் ஆரம்பத்தில் எழுந்தன. ஆனால் மின்னல் முரளி திரைப்படத்திற்கும் வீரன் திரைப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என மின்னல் முரளி படத்தின் இயக்குனர் பேசில் ஜோசப் அவர்களே தெரிவித்திருந்தார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட கடந்த ஜூன் 2ம் தேதி வீரன் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸானது. பக்கா ஃபேமிலி என்டர்டைனர் படமாகவும் வித்தியாசமான சூப்பர் ஹீரோ படமாகவும் வீரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வீரன் திரைப்படத்தின் அதிரடியான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி, "மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…  தொடர்ந்து வலிமையுடன் ஓடுகிறது!!!- குழந்தைகளே நாங்கள் எங்களது ஓட்டத்தை நிறுத்துவதற்குள் உங்களது பெற்றோர்களை படத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். ஏனென்றால் இத்திரைப்படம் டிவியில் பார்ப்பதை விட தியேட்டரில் பார்க்கும்போது இன்னும் நன்றாக இருக்கும்!" என குறிப்பிட்டு இருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் வீரன் பட அதிரடியான ACTION PACKED மேக்கிங் வீடியோ இதோ…
 

Mask ah போட்டா மின்னல் வீரன் 😁 Still running strong !!! - kids take your parents to the movie, before we finish our run 😉 Cos this might look good in the theatres than TV 😁❤️🤟🏻 pic.twitter.com/Pb3AAMmgSJ

— Hiphop Tamizha (@hiphoptamizha) June 11, 2023

சினிமா

"RIGHT IS BACK!"- சுந்தர்Cயின் பக்கா ஆக்சனில் வரும் தலைநகரம் 2 பட மிரட்டலான ட்ரெயலர் இதோ!

மோசடி எச்சரிக்கை: ஹனுமான் இருக்கை - டிக்கெட் விலை குறித்த சர்ச்சைகளுக்கு ஆதிபுரூஷ் படக்குழு விளக்கம்!
சினிமா

மோசடி எச்சரிக்கை: ஹனுமான் இருக்கை - டிக்கெட் விலை குறித்த சர்ச்சைகளுக்கு ஆதிபுரூஷ் படக்குழு விளக்கம்!

மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... கவனத்தை ஈர்க்கும் புது SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... கவனத்தை ஈர்க்கும் புது SNEAK PEEK வீடியோ இதோ!