யோகி பாபு - முனீஸ்காந்தின் கலக்கல் காமெடி... சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ இதோ!

சித்தார்த்தின் டக்கர் பட கலகலப்பான புது ஸ்னீக் பீக் வீடியோ,siddharth in takkar movie yogi babu munishkanth sneak peek video | Galatta

இந்திய சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சித்தார்த் நடிப்பில் மூன்று வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்திருக்கும் டக்கர் திரைப்படத்திலிருந்து கலகலப்பான புதிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. உதவி இயக்குனராக இயக்குனர் மணிரத்தினம் அவர்களிடம் பணியாற்றி, பின்னர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரால் பாய்ஸ் படத்தில் கதாநாயகராக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகர் சித்தார்த் தொடர்ந்து கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர். கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு அருவம் திரைப்படம் தமிழில் சித்தார்த் நடிப்பில் ரிலீஸ் ஆனது. இதனையடுத்து சித்தார்த்தின் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக தயாராகும் திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இதில் முதலாவதாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் மிக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் பண்ணையாரும் பத்மினியும் மற்றும் சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் S.U.அருண் குமார் இயக்கத்தில் தற்போது தயாராகி வரும் சித்தா திரைப்படத்திலும் கதையின் நாயகனாக சித்தார்த் நடித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழும் தயாரிப்பாளர் சசிகாந்த் முதல் முறை இயக்குனராக களமிறங்க, மாதவன், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் டெஸ்ட் திரைப்படத்திலும் சித்தார்த் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபோக பெயரிடப்படாத ஒரு ரொமான்டிக் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ள நடிகர் சித்தார்த் மீண்டும் டக்கர் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.கிரிஷ் இயக்கத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த வரிசையில் சித்தார்த் நடிப்பில் பக்கா ரொமான்டிக் ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படமாக தற்போது வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டக்கர். கப்பல் படத்தின் இயக்குனர் கார்த்திக்.ஜி.க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து திவ்யன்ஷா கதாநாயகியாக நடித்திருக்கும் டக்கர் திரைப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், முனிஸ்காந்த், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். PASSION STUDIOS சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் மற்றும் ஜி.ஜெயராம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் டக்கர் திரைப்படத்திற்கு வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில், ஜி.ஏ.கௌதம் படத்தொகுப்பு செய்ய, நிவாஸ்.கே.பிரசன்னா இசையமைத்திருக்கிறார். 

சித்தார்த்தின் திரைப் பயணத்திலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்ட ரிலீஸாக 1234க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கும் டக்கர் திரைப்படம் ரிலீஸான முதல் நாளிலேயே 2.43 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளி வருகின்றன. இந்த நிலையில் டக்கர் திரைப்படத்தின் புதிய ஸ்னீக் பீக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது.  ஒரகடம் மாதவன் எனும் கதாபாத்திரத்தில் வரும் முனிஸ் காந்தம் யோகி பாபுவும் இணைந்து கலக்கும் கலகலப்பான இந்த ஸ்னீக் பீக் வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.
 

மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... கவனத்தை ஈர்க்கும் புது SNEAK PEEK வீடியோ இதோ!
சினிமா

மான்ஸ்டர் வெற்றி கூட்டணி SJசூர்யா - பிரியா பவானி சங்கரின் பொம்மை... கவனத்தை ஈர்க்கும் புது SNEAK PEEK வீடியோ இதோ!

அர்ஜுன் ரெட்டி இயக்குனருடன் கைகோர்த்த நட்சத்திர நடிகர்... கங்குவா ஸ்டன்ட் இயக்குனரின் அடுத்த படைப்பு! அதிரடி ப்ரீ-டீசர் இதோ
சினிமா

அர்ஜுன் ரெட்டி இயக்குனருடன் கைகோர்த்த நட்சத்திர நடிகர்... கங்குவா ஸ்டன்ட் இயக்குனரின் அடுத்த படைப்பு! அதிரடி ப்ரீ-டீசர் இதோ

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே
சினிமா

‘தளபதி விஜய் கல்வி விருது விழா!’ 10-12ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க பணிகள் தீவிரம்! விவரம் உள்ளே