கோலிவுட்டில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராகவும் இருப்பவர் நடிகர் மஹத். மங்காத்தா மற்றும் ஜில்லா போன்ற படங்களில் தனது அசத்தலான நடிப்பில் ஈர்த்திருப்பார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகளவில் பிரபலமானார். சென்னை 28 - 2, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார். 

மஹத், ஐஸ்வர்யா தத்தா நடிக்கும் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா  படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் ரசிகர்களிடம் ஆச்சர்யம் ஏற்படுத்தும் அட்டகாசாமான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. 

தற்போதைய தமிழ் சினிமாவின் காமெடி நாயகனாக வலம் வரும் யோகி பாபு, இப்படத்தில் புதையலை தேடும் கடற்கொள்ளையனான ப்ளாக் ஸ்பாரோவாக நடிக்கிறார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தின் முழுக்கதாப்பத்திரங்களும் ஒரு ரிசாட்டிற்குள் இந்த வித்தியாசமான கதாப்பாத்திரத்திடம் மாட்டிக்கொண்டு முழிப்பது பெரும் காமெடி கலாட்டாவா  அமைக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் ப்ளாக் ஸ்பாரோ கதாப்பாத்திரம் மீது பரிதாபம் தோன்றுவதாகவும் அது மேலும் நகைச்சுவை உண்டாக்கும்படியும் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

மஹத், ஐஸ்வர்யா, யோகிபாபு கூட்டணியுடன் நடிகை சாக்‌ஷி அகர்வால் கண்கவர் பாத்திரத்தில் நடிக்கும் இப்படம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி விருந்தாக இருக்கும். இப்படத்தினை இயக்குநர் பிரபு ராம் C இயக்கியுள்ளார். படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி  பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் மேக்வென் இயக்கத்தில் இவன் தான் உத்தமன் திரைப்படத்தில் நடித்துள்ளார் மஹத். ஹாரர் த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. தமன் இசையமைக்கும் இதற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இதனை பரதன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.வி.பரதன் தயாரிக்கிறார். சமீபத்தில் மாநாடு படப்பிடிப்பு தளத்தில் இருந்து சிலம்பரசனுடன் இருக்கும் மஹத்தின் புகைப்படம் வெளியாகி வைரலானது.