இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.நடிப்பதில் இறங்கினாலும் இசை மீது கொண்டுள்ள காதலை விடமால் மற்ற படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.அடுத்ததாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு ஆகிய இரண்டு படத்தில் நடித்துள்ளார்.இதில் சிவகுமாரின் சபதம் படம் விரைவில் வெளியாகவுள்ளது.அன்பறிவு படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார்.

காஷ்மீரா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.வித்தார்த்,நெப்போலியன்,சாய்குமார்,ஊர்வசி,சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வந்த இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது என்ற தகவல் கிடைத்துளளது.