தளபதி விஜய்- லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் இணைந்த மாநகரம் பட நடிகர்... ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ!

தளபதி விஜயின் லியோ படத்தில் இணைந்த மதுசூதனன் ராவ்,Maanagaram actor madhusudhanan rao joined in thalapathy vijay leo movie | Galatta

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் உச்ச நட்சத்திர நாயகராக தொடர்ந்து அட்டகாசமான படைப்புகளை வழங்கி வரும் தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வாரிசு திரைப்படம் பக்கா பேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதனை தொடர்ந்து, தளபதி விஜய் தனது திரைப்பயணத்தில் 67-வது திரைப்படமாக தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம், கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டராக 500 கோடி வசூல் செய்த விக்ரம் திரைப்படத்தை தொடர்ந்து தயாராவதால் இந்திய அளவில் லியோ திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் SS.லலித் குமார் மற்றும் ஜெகதீசன் பழனிசாமி இணைந்து தயாரிக்கும் லியோ திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்சமயம் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோ திரைப்படத்தில் தளபதி விஜய் உடன் த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்யும் லியோ திரைப்படத்திற்கு N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களாக  அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். 

லியோ திரைப்படம் இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக ரிலீஸ் ஆகும் என பட்டக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக காஷ்மீரில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் தன் பகுதி படப்பிடிப்பை இயக்குனர் மிஷ்கின் சமீபத்தில் நிறைவு செய்த நிலையில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில தினங்களுக்கு முன்பு தளபதி விஜயுடன் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். முன்னதாக தென்னிந்திய சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான பாபு ஆண்டனி லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நிலையில், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் முதல் படமான மாநகரம் திரைப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் மதுசூதனன் ராவ் தற்போது இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக காஷ்மிரில் லியோ படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா மற்றும் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவு மாஸ்டர்களுடன் மதுசூதனன் ராவ் காஷ்மீர் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்தப் புகைப்படம் இதோ…
benidict garrett about chiyaan vikram in dhruva natchathiram release

சினிமா

"யார் அந்த பிகிலி?"- ரசிகர்களை உற்சாகப்படுத்திய விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 பட அட்டகாசமான அறிவிப்பு இதோ!

டாடா தயாரிப்பாளருடன் இணைந்த அருள்நிதியின் அடுத்த அதிரடி படம்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான டைட்டில்-மோஷன் போஸ்டர் இதோ!
சினிமா

டாடா தயாரிப்பாளருடன் இணைந்த அருள்நிதியின் அடுத்த அதிரடி படம்... சர்ப்ரைஸாக வந்த மிரட்டலான டைட்டில்-மோஷன் போஸ்டர் இதோ!

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட பரபரக்கும் ஷூட்டிங் அப்டேட்... பிரபல ஹாலிவுட் நடிகர் கொடுத்த ருசிகர தகவல் இதோ!
சினிமா

உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 பட பரபரக்கும் ஷூட்டிங் அப்டேட்... பிரபல ஹாலிவுட் நடிகர் கொடுத்த ருசிகர தகவல் இதோ!